கம்பராமாயணம் 4826 · சுந்தர 2.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொருஅரும்உருவத்து அன்னான் - ஒப்புமையற்ற திருமேனியை உடைய அனுமன்; போகின்றபொழுது - கடல் கடந்து தாவும் சமயத்தில், தள்ளாநிமிர்ச்சிய - அடக்க முடியாத உயர்வை உடையனவும்; தம்முள் ஒப்ப - தமக்குள் ஒரே மாதிரி இருப்பனவும்; வேகம் தருவன - விரைவைக் கொடுப்பனவுமான; தடக்கை - பெருங்கைகள்; ஒருவுஅரும் குணத்து வள்ளல் - பிரிதல் இல்லாத நற்குணத்தை உடைய இராமபிரானும்; ஒருயிர்த் தம்பி - (அவனுக்கு) ஒப்பற்ற உயிர்போன்ற தம்பியும்; என்னும் இருவரும் - என்று கூறப்பெற்ற இரண்டு சகோதரர்களும்; அவ் இரண்டு பாலும் முன்னர்ச் சென்றால் ஒத்த - இரண்டு பக்கத்திலும் அனுமனுக்கு முன்பக்கம் போவது போன்றிருந்தன.
அனுமனின் கைகள் அடக்க முடியாத பெருமிதத் தோற்றத்தாலும் ஒன்று போன்றிருந்தன. (அனுமனுக்கு) இரண்டு புறத்திலும் பாதுகாப்பாகச் செல்லும் இராம இலெக்குவர்களை ஒத்திருந்தன. அனுமன் தோழர்கள்பால் 'நும் அருளும், எம்கோன் ஏவலும் சிறைகளாகக் கலுழனிற் கடப்பல்' என்று பேசியதை ஒப்பிடுக (4734).
ஆங்கிலம் · English translationAI
Translation
- As that one of matchless form went on, his great arms that gave him speed,
- stretched out without slackening and alike to one another,
- on either side were like the two, the bountiful one of inseparable virtue
- and his brother who is one life with him, going on ahead of him.
What the poem says
Aṉumaṉ's two outstretched arms, matched and tireless, drive him forward. The poet sees them as Irāmaṉ and his devoted brother Ilakkuvaṉ walking ahead on either side to guard him. This echoes Aṉumaṉ's own words on the mountain, that his comrades' blessing and his lord's command would be the two wings that carried him across.