கம்பராமாயணம் 4825 · சுந்தர 2.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலப்பிலாதஉடம்பு - அழிவற்ற உடலானது; ஓசனை அமைந்து உடைய என்ன - ஒரு யோசனை தூரம் பெற்றுள்ளது என்று; தேசமும் நூலும் சொல்லும் - உலக மக்களும் புராணங்களும் கூறுகின்ற; திமிங்கிலகிலங்களோடும் - திமிங்கில கிலம் என்னும் கடற் பிராணியுடன்; ஆசையை உற்ற வேலை - திக்குகளை அளவிய கடல்கள்; கலங்க - கலக்கம் அடைய; அன்று - கடலைத் தாண்டிய தினத்தில்; அண்ணல் யாக்கை வீசிய காலின் - அனுமன் திருமேனியானது உந்தித் தள்ளிய காற்றினாலே; மீன்கள் எல்லாம் - கடல் மீன்கள் யாவும்; வீந்து மிதந்தன - இறந்து மிதந்தன.
அனுமன் வேகமாகச்சென்றதனால் உண்டான காற்றால் கடலும் திமிங்கல கிலங்களும் கலங்கின. மீன்கள் இறந்தன. திமிங்கிலத்தை உண்ணும் பிராணியைத் திமிங்கில கிலம் என்பர். கிலம் - அழிவு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Along with the whale-swallowers, which land and lore both say
- have bodies of endless size, a league long,
- the sea that reaches to the ends of the directions was churned, and on that day, in the wind
- the great one's body flung out, all the fish died and floated up.
What the poem says
The blast from Aṉumaṉ's passing churns the whole ocean. Even the timiṅkilakilam, a legendary sea monster said to be a league long and to swallow whales, is thrown about, and the ordinary fish die and float to the surface.