கம்பராமாயணம் 4824 · சுந்தர 2.36

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வலங்கையின் - வலக்கரத்தில்; வயிர ஏதி வைத்தவன் - வச்சிராயுதத்தை ஏந்திய இந்திரன்; வைகும் நாடும் - தங்கிய உலகமும்; கலங்கியது - கலக்கம் அடைந்தது; ஏகுவான்தன் - செல்லும் அனுமனுடைய; கருத்து என்கொல் என்னும் கற்பால் - திருவுள்ளம் யாதோ என்னும் ஆராய்ச்சியால்; இப்பால் விலங்கு அயில் எயிற்று வீரன் - இவ்வுலகில் வளைந்த கூர்மையான பற்களை உடைய அனுமன்; முடுகிய வேகம் - கடுமையான வேகமானது; வெய்யோர் இலங்கையின் அளவு அன்று என்னா - அரக்கர்களுக்குரிய இலங்கையின் எல்லையுடன் அடங்குவது அன்று என்று கூறி; இம்பர் நாடு இரிந்தது - இந்த உலகம் கலங்கிச் சிதறியோடிற்று.

அனுமன் வேகம் இலங்கையுடன் அடங்குவதன்று, நம்மீதும் பாயலாம் என்று கருதி உலக மக்கள் கலங்கி ஓடினர். 'வலக் கை' என்பது எதுகை நோக்கி 'வலங்கை' எனத் திரிந்தது. கற்பு - கல்வி, ஆராய்ச்சி; உலகம் தாங்கிய மேம்படு கற்பின் (பதிற்றுப் 59-8) என்றது காண்க. வயிர ஏதி - வச்சிராயுதம். முள்ளுக்கு இட்ட நெருப்பு மூப்பனையும் அழிக்கும். அதுபோல் தீயவர்மேல் கொண்ட சீற்றம் நமக்கும் ஊறு விளைக்கும் என்று உலகத்தவர் கருதினர். (காஞ்சிப் புராணம் - நாட்டுப்படலம் 102)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even the land where he dwells who holds the diamond weapon in his right hand
  2. was shaken, wondering, “What can be in the mind of this one who goes?”;
  3. and here below, saying, “The speed with which the hero of curved, sharp teeth rushes on
  4. will not stop at the cruel ones' Ilaṅkai!”, the people of this world fled.

What the poem says

Aṉumaṉ's fury alarms everyone. Intiraṉ's heaven is uneasy, wondering what he intends. On earth people run away, fearing that such force will not stop at Ilaṅkai but may fall on them too. The commentary compares it to a fire set to burn thorns that can also consume the old man who lit it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1valaṅkaiyiṉ vayira ēti vaittavaṉ vaikum nāṭum
kalaṅkiyatu! 'ēkuvāṉtaṉ karuttu eṉ kol? 'eṉṉum kaṟpāl;
'vilaṅku ayil eyiṟṟu vīraṉ muṭukiya vēkam veyyōr
ilaṅkaiyiṉ aḷavu aṉṟu! 'eṉṉā, impar nāṭu irintatu ippāl!