கம்பராமாயணம் 4823 · சுந்தர 2.35

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத்தோள் குரக்குச் சீயம்,
சென்று உறு வேகத் திண்கால் எறிதரத், தேவர் வைகும்
மின்தொடர் வானத்து ஆன விமானங்கள், விசையில் தம்மில்
ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி, மாக்கடல் உற்ற மாதோ!

பொருள் · Meaning in Tamil

குன்றொடுகுணிக்கும் - மலைகளுடன் ஒப்புமையாகப் பேசப்படும்; கொற்றக் குவவுத்தோள் - வெற்றியையுடைய பருத்த தோள்களை உடைய, குரக்குச் சீயம் - வானர சிங்கமாகிய அனுமன்; சென்றுஉறு வேகத் திண்கால் - செல்வதால் உண்டாகும் கடுங்காற்று; எறிதர - மோத (அதனால்); மின்தொடர் வானத்து ஆன தேவர் வைகும் விமானங்கள் - மின்னல் இடையறாது இயங்கும் வானில் தேவர்கள் தங்கியுள்ள விமானங்கள்; விசையின் - வேகத்தால், தம்மின் ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி - தங்களுக்குள் ஒன்றுடன் ஒன்று உடையும்படி மோத; மாக்கடல் உற்ற - கருங்கடலில் விழுந்தன. அனுமன் வேகமாகச்செல்வதால் உண்டான பெருங்காற்று மோத அதனால் தேவர்களின் விமானங்கள் ஒன்றோடொன்று தாக்கிக் கடலில் விழுந்தன. மாது, ஓ - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the strong, swift wind raised by the going of that lion among monkeys,
  2. whose victorious, rounded shoulders are reckoned equal to mountains, struck them,
  3. the aerial cars of the gods, which ride in the lightning-streaked sky,
  4. dashed against one another with such force that they broke and fell into the great sea!

What the poem says

The wind of Aṉumaṉ's passage is so violent that the gods' flying chariots, cruising in the sky, are knocked into each other, smashed, and sent tumbling into the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṉṟoṭu kuṇikkum koṟṟak kuvavuttōḷ kurakkuc cīyam,
ceṉṟuṟu vēkat tiṇkāl eṟitarat, tēvar vaikum
miṉtoṭar vāṉattu āṉa vimāṉaṅkaḷ, vicaiyiṉ tammiṉ
oṉṟoṭu oṉṟu uṭaiyat tākki, mākkaṭal uṟṟa mātō!