கம்பராமாயணம் 4822 · சுந்தர 2.34

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மேருவை முழுதும் சூழ்ந்து, மீது உற்ற வேக நாகம்,
கார்நிறத்து அண்ணல் ஏவக் கலுழன் வந்து உற்ற காலைச்
சோர்வு உறும் மனத்த தாகிச், சுற்றிய சுற்று நீங்கிப்
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது, அப் பிறங்கு பேழ்வால்!

பொருள் · Meaning in Tamil

அப் பிறங்குபேழ்வால் - அந்த விளக்கமானபெரிய வால்; கார்நிறத்து அண்ணல் ஏவ - கரிய நிறத்தையுடைய திருமால் கட்டளையிட; கலுழன் வந்து உற்ற காலை - கருட பகவான் வந்த சமயத்தில்; மேருவை முழுதும் சூழ்ந்து - மேருமலையை முற்றிலும் பற்றிக்கொண்டு; மீதுஉற்ற வேகநாகம் - சிகரத்திலே தங்கிய விடம் பெற்ற ஆதிசேடன்; சோர்வுறு மனத்ததாக - தளர்ச்சியுற்ற மனத்தை உடையதாய்; சுற்றிய சுற்று நீங்கி - மேருமலையைச் சுற்றியிருந்த கட்டு விலகி, பேர்வுறுகின்ற ஆறும் ஒத்தது - நீங்கிப் போகின்ற தன்மையையும் ஒத்திருந்தது.

மேருமலையைப் பிணித்திருந்த ஆதிசேடன் கருடன் வந்ததும் பிணிப்பு நீங்கி விலகிச் செல்வதுபோல் அனுமன் வால் இருந்தது. வேகம் - நஞ்சு - அரவு கான்ற வேகம் (சிந்தாமணி 1274) விரைவு என்று கூறினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The venomous serpent that had coiled round the whole of Mēru and lay on its top,
  2. when Kaluḻaṉ came at the bidding of the dark-hued Lord,
  3. lost heart, loosened the coils it had wound,
  4. and slid away: that shining, mighty tail was like this too.

What the poem says

Another picture of the long tail streaming behind Aṉumaṉ. It recalls the serpent Ādiśēṣaṉ, wrapped around Mount Mēru, uncoiling and sliding off in fear when Garuḍa arrived at Tirumāl's command.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēruvai muḻutum cūḻntu, mītuṟṟa vēka nākam,
kārniṟattu aṇṇal ēvak kaluḻaṉ vantuṟṟa kālaic
cōrvuṟu maṉattatu ākic, cuṟṟiya cuṟṟu nīṅkip
pērvuṟukiṉṟavāṟum ottatu, ap piṟaṅku pēḻvāl!