கம்பராமாயணம் 4833 · சுந்தர 2.45

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூவால் இடையூறுபுகுந்து - இந்திரனுக்கு வழங்கிய மாலையால் துன்பம் உண்டாகி; பொறாத நெஞ்சின் - பொறுமையற்ற உள்ளமுடைய; கோஆம் முனி - தலைமைப் பண்புடைய துருவாச முனிவன்; சீறிட - சீற்றம் அடைய; வேலை குளித்த எல்லாம் - கடலில் மூழ்கிய எல்லாப் பொருள்களும்; மூவா முதல் நாயகன் - முதுமை அடையாத முதன்மையான திருமால்; மீள - அப்பொருள்கள் மீண்டும் வரும்படி; தேவாசுரர் முயன்ற அந்நாள் - தேவாசுரர் மூலம் கடல் கடைந்து முயற்சி செய்த காலத்தில்; வேலையில் வந்து எழு - கடலின் கண்ணே உதயமான; திங்கள் என்ன - சந்திரனைப்போல.

தான் வழங்கியமாலையை அவமதித்த இந்திரனைத் துருவாச முனிவர் சபிக்க, விண்ணுலகப் பொருள்கள் கடலில் மறைந்தன. திருமாலும் தேவர்களும் கடல் கடைந்தபோது அவை வெளிப்பட்டன. அப்பொருள்களுடன் வெளிப்பட்ட சந்திரனைப்போல் மைந்நாகமலை வெளிப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When trouble came about through a garland and the sage who was a king among sages, his heart unable to bear it,
  2. flew into a rage, and all things sank into the sea,
  3. on the day the unageing First Lord strove to bring them back,
  4. it was like the moon that came up out of the sea churned by gods and asuras!

What the poem says

The comparison goes back to the churning of the ocean. The sage Turvācar gave Intiraṉ a garland, and Intiraṉ treated it with contempt. In his fury the sage cursed him, and the treasures of heaven sank into the sea. To recover them Tirumāl had the gods and asuras churn the ocean, and among the things that rose was the moon. Bright Maiṉṉākam coming up from the waves looks like that moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūvāl iṭaiyūṟu pukuntu, poṟāta neñciṉ
kō ām muṉi cīṟiṭa, vēlai kuḷitta ellām,
mūvā mutal nāyakaṉ mīḷa muyaṉṟa annāḷ,
tēvācurar vēlaiyil vantu eḻu tiṅkaḷ eṉṉa!