கம்பராமாயணம் 4834 · சுந்தர 2.46

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நிறம் குங்குமம் ஒப்பன, நீல் நிறம் வாய்ந்த, நீரின்
இறங்கும் பவளக் கொடி சுற்றின, செம்பொன் ஏய்ந்த,
பிறங்கும் சிகரப் படர் முன்றில் தொறும், பிணாவோடு
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர!

பொருள் · Meaning in Tamil

குங்கும நிறம்ஒப்பன - குங்கும நிறத்தை ஒத்திருப்பவையும்; நீல்நிறம்வாய்ந்த - நீலநிறம் பெற்றவையும், நீரின் இறங்கும் பவளக் கொடி சுற்றின - தண்ணீரிலே வேரை வீழ்த்திய பவளக் கொடியால் சுற்றப் பெற்றவையும்; செம்பொன் ஏய்ந்த - செம்பொன்னை ஒத்தவையும்; பிறங்கும் சிகரம்படர் - விளங்குகின்ற சிகரத்தில் பரவிய; முன்றில் தொறும் - முற்றங்கள் தோறும்; பிணாவொடு உறங்கும் மகரங்கள் - பெட்டைகளுடன் உறங்குகின்ற மகரமீன்கள்; உணர்ந்து உயிர்ப்பொடு பேர - உறக்கம் நீங்கிப் பெருமூச்சுடன் பெயர்ந்து செல்ல. மைந்நாகமலையின் சிகரங்கள் குங்குமத்தைப் போலவுள்ளன. நீலநிறம் பெற்றுள்ளன. பவளக் கொடியால் சுற்றப்பட்டுள்ளன. பொன் போன்றன. அம் மலையின் முற்றங்களில் மகரமீன்கள் பெட்டையுடன் உலாவுகின்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some saffron-red in hue, some blue,
  2. some wreathed with coral vines that trail down into the water, some like red gold:
  3. in every courtyard spread across those shining peaks,
  4. the makaras sleeping with their mates woke and moved off, breathing hard.

What the poem says

A close-up of Maiṉṉākam as it rises: its peaks are saffron-red, blue and golden, wound with coral that trails into the sea. On the terraces of its summits, sea creatures, the makaras, had been sleeping with their mates; as the mountain lifts out of the water they wake and swim away, puffing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṟam kuṅkumam oppaṉa, nīl niṟam vāynta, nīriṉ
iṟaṅkum pavaḷak koṭi cuṟṟiṉa, cempoṉ ēynta,
piṟaṅkum cikaram paṭar muṉṟil toṟum, piṇāvoṭu
uṟaṅkum makaraṅkaḷ uyirppoṭu uṇarntu pēra!