கம்பராமாயணம் 4835 · சுந்தர 2.47

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கூன் சூல் முதிர் இப்பி குரைக்க நிரைத்த பாசி
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில்
தான் சூலநாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம்
மீன்சூழ்வரும் அம் முழு வெண்மதி வீறு சீற!

பொருள் · Meaning in Tamil

கூன் சூல் முதிர்இப்பி - உடல் வளைந்த முற்றிய கருப்பம் பெற்ற சிப்பிகள்; குரைக்க - ஒலிக்க; நிரைத்த பாசி - வரிசை வரிசையான பாசியானது; வான்சூல் மழை ஒப்ப - வானத்தில் உள்ள கருவுற்ற மேகத்தை ஒத்திருக்க; வயங்கு பளிங்கு முன்றில் - விளங்குகின்ற பளிங்குமுற்றத்தில்; சூலி நாளில் தான் - கருவுயிர்க்கும் காலத்தின் கண்; தகை முத்தம் உயிர்த்த - சிறப்புடைய முத்துக்களை வெளிப்படுத்திய, சங்கம் - சங்கு; மீன் சூழ் வரும் - நட்சத்திரங்கள் சூழ்ந்து வருகின்ற; முழுவெண்மதி வீறு சீற - வெண்மையான பூரண சந்திரனின் பெருமையைக் குறைக்க.

கடற்பாசிகள் மேகத்தை ஒத்துள்ளன. முத்துக்களைப் பெற்ற சங்கு நட்சத்திரங்களால் சூழப்பெற்ற பூரண சந்திரனைப் போன்றிருந்தது. சூல் முதிர்கூன் இப்பி என்க. இப்பி - சிப்பி. குரை - ஒலிக்க, தான் - அசை. சூல நாள் எனப் பாடங் கொண்டு, இரேவதி நட்சத்திரத்தில் என்று பொருள் கூறுவர் சிலர். இரேவதி (பிங்கலந்தை 2057)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The curved oysters, heavy with ripe young, made their sound; the rows of seaweed
  2. were like rain clouds big with water in the sky; and in the shining crystal courtyards
  3. the conches that had brought forth fine pearls in their time of birth
  4. outshone the glory of the full white moon that moves with the stars around it.

What the poem says

More details of the rising mountain. Pearl oysters grate and click, the dark seaweed hangs in rows like rain clouds, and on the crystal terraces lie conches that have just given birth to pearls. A white conch ringed by its pearls outshines the full moon surrounded by stars.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṉ cūl mutir ippi kuraikka niraitta pāci
vāṉ cūl maḻai oppa vayaṅku paḷiṅku muṉṟil
tāṉ cūlināḷil takai muttam uyirtta caṅkam
mīṉcūḻvarum am muḻu veṇmati vīṟu cīṟa!