கம்பராமாயணம் 4838 · சுந்தர 2.50

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொடு நாலொடு இரண்டு குலப்பகை, குற்றம் மூன்றும்,
சுடு ஞானம் வெளிப்பட, உய்ந்த துயக்கு இலார்போல்,
விடம் நாகம் முழைத்தலை விம்மல் உழந்து, வீங்கி,
நெடுநாள் பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப!

பொருள் · Meaning in Tamil

நாலொடு இரண்டுகொடும் குலப்பகை - ஆறு வகையான கொடிய பரம்பரையாக வரும் பகையையும்; குற்றம் மூன்றும் - மூன்று குற்றத்தையும்; சுடுஞானம் - அழிக்கின்ற ஞானமானது; வெளிப்பட - ஆன்மாவிலே தோன்ற, உய்ந்த துய்க்கு இலார்போல் - தப்பிப் பிழைத்த பற்றற்ற ஞானிகளைப் போல; முழைத்தலை நெடுநாள் விம்மல் உழந்து - மலைக் குகைகளில் நீண்ட நாட்கள் பொருமி வருந்தி; வீங்கி பொறையுற்ற - உடல் பருத்து அடங்கிக் கிடந்த; விடநாகம் - விடப் பாம்புகள்; உயிர்ப்பு நிமிர்ந்துநிற்ப - பெருமூச்சு வெளிப்பட்டு நிலைக்க. மலையின் குகையில் அகப்பட்ட பாம்புகள் ஆறு வகையான பகையையும் மூன்று குற்றமும் நீங்கிய ஞானிகளைப் போல விடுதலை பெற்று உயிர்த்தன. பகை ஆறு - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பவை. முக்குற்றம் - ஐயம், திரிபு, அறியாமை. தனம், குலம், கல்வி என்று குற்றம் மூன்று என்று பழைய உரை பேசும். வஞ்ச முக்குறும்பு - என்று இராமானுச நூற்றந்தாதி பேசும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like those who, when burning wisdom dawns, escape the cruel inborn foes, four and two,
  2. and the three faults, and are saved, free of all clinging,
  3. the venomous snakes in the caves, which had long suffered, choked and swollen,
  4. let out at last the breath they had held so long, and stood up straight.

What the poem says

Snakes that had been trapped in the mountain's underwater caves for ages, swollen and gasping, can at last breathe out and raise their heads. The poet compares their relief to the release of the wise when true knowledge burns away the six inner enemies (lust, anger, greed, pride, elation and arrogance) and the three faults of doubt, error and ignorance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭu nāloṭu iraṇṭu kulappakai, kuṟṟam mūṉṟum,
cuṭu ñāṉam veḷippaṭa, uynta tuykku ilārpōl,
viṭanākam muḻaittalai vimmal uḻantu, vīṅki,
neṭunāḷ poṟai uṟṟa uyirppu nimirntu niṟpa!