கம்பராமாயணம் 4839 · சுந்தர 2.51

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1எழுந்து ஓங்கி, விண்ணோடு மண் நோக்க, இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் எங்கும்
கொழுந்து ஓடி நின்ற கொழுங்குன்றை வியந்து நோக்கி,
அழுங்கா மனத்து அண்ணல், 'இது என்கொல்? ' எனா அயிர்த்தான்.

பொருள் · Meaning in Tamil

அழுங்கா மனத்துஅண்ணல் - போகங்களில் தாழாதசோர்வு இல்லாத உள்ளத்தையுடைய அனுமன்; இலங்கும் ஆடி - விளங்குகின்ற கண்ணாடியின்கண்; உழுந்து ஓடுகாலத்திடை - உழுந்தானது ஒருமுறை உருள்வதற்குள்; எழுந்து ஓங்கி - கடலிலிருந்து மேலே எழுந்து; விண்ணொடு மண்ஒக்க - ஆகாயமும் பூமியும் ஒன்றாகும்படி; உம்பரின் உம்பர் ஓங்கி - மேலும் மேலும் வளர்ந்து பரவி; கொழுந்து ஓடி நின்ற - மலைச் சிகரங்கள் வளர்ந்த; கொழுங்குன்றை - மைந்நாக மலையை, வியந்து நோக்கி - ஆச்சரியத்துடன் பார்த்து; இது என்கொல் எனா அயிர்த்தான் - இப்பொருள் யாதோ என்று ஐயம் உற்றான்.

மைந்நாகமலை, கண்ணாடியில் உழுந்து ஒருமுறை சுழல்வதற்குள் எழுந்தது கண்டு அனுமன் இது யாதோ என்று அதிசயப்பட்டான். ஓடுதல் - சுழலுதல். ஓடுவளை திருத்தியும் என்னும் முல்லைப் பாட்டுக்கு (82) சுழலுகின்ற வளையைச் சுழலாமல் செறித்தும் என்றும் உரை கண்டனர். சம்பந்தப் பிரான், 'எழிற்கண்ணாடி உழுந்துருளும் அளவையின் ஒளி எரி கொள வெஞ்சிலை வளைத்தோன்' என்பர் (ஏரிசையும் - முதல் திருமுறை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rising and towering, making sky and earth as one, in the time it takes
  2. a black gram seed to roll once across a shining mirror, soaring higher than the heavens,
  3. the rich mountain with its peaks shooting up: gazing at it in wonder,
  4. the lord of unwavering mind wondered, “What can this be?”

What the poem says

Maiṉṉākam shoots up so fast that it is in the sky before a lentil could roll once across a polished mirror, a traditional Tamil measure of an instant. Aṉumaṉ, whose mind is never shaken, looks at the sudden mountain in front of him in surprise and wonders what it can be.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntu ōṅki, viṇṇoṭu maṇ okka, ilaṅkum āṭi
uḻuntu ōṭu kālattiṭai, umpariṉ umpar ōṅki
koḻuntu ōṭi niṉṟa koḻuṅkuṉṟai viyantu nōkki,
aḻuṅkā maṉattu aṇṇal, 'itu eṉkol? ' eṉā ayirttāṉ.