கம்பராமாயணம் 4840 · சுந்தர 2.52

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடுங்குன்று - பெரியமைந்நாக மலையானது; நீர்மேல் படரா நிமிர்ந்து நிற்றல் - கடலின் மேலே விரிந்து உயர்ந்திருத்தல்; மேல்சீர் படராது எனச் சிந்தை உணர்ந்து - மேலான சிறப்பைப் பெருக்காது என்று மனத்தே கருதி; செல்வான் - செல்பவனாகிய அனுமன்; வேர்மேல்பட - மலையின் வேரானது மேலே தெரியவும்; வன்தலை கீழ்ப்பட - வலிமையான சிகரம் கீழே விழவும், நூக்கி - (அந்த மலையை) உந்தித் தள்ள; விண்ணோர் ஊர்மேல் படர - தேவர்களின் ஊர் தன் மேல் பரவும்படி, கடிது - வேகமாக; உம்பரின் மீது உயர்ந்தான் - வானின்கண் பாய்ந்தான்.

மைந்நாகமலையைக்கண்ட அனுமன் இத் தடையால் சிறப்பு உண்டாகாது என்று கருதி மேல் நோக்கிப் பாய்ந்தான். வெள்ளம் தடையைக் கண்டபோது அதைக் கடக்க மேலே போவது போன்றது அனுமன் செயல். ஆதலின் உம்பரின் ஊடு பாய்ந்தான் என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Realising in his mind, “A tall mountain rising up and spreading over the water
  2. bodes no good for my task,” he, as he went,
  3. thrust it so that its roots turned up and its strong head turned down, and
  4. swiftly soared above the heavens, so that the city of the gods lay spread beneath him.

What the poem says

Aṉumaṉ takes the mountain looming in his path for an obstacle that can only hinder his mission. Without slowing, he shoves it aside so hard that it turns upside down, roots in the air and peak downward, and he rises higher still, above even the heavens, like a flood that climbs over a barrier in its way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nīrmēl paṭarā, neṭuṅkuṉṟu nimirntu niṟṟal
cīrmēl paṭarātu 'eṉac cintai uṇarntu, celvāṉ,
vēr mēlpaṭa vaṉtalai kīḻppaṭa, nūkki, viṇṇōr
ūrmēl paṭarak kaṭitu umpariṉ mītu uyarntāṉ!