கம்பராமாயணம் 4841 · சுந்தர 2.53

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உந்தாமுன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம்
சிந்தாகுலம் உற்றது; பின்னரும் தீர்வில் அன்பால்
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானுட வேடம் ஆகி
'எந்தாய்! இது கேள்! 'என இன்ன இசைத்தது அன்றே.

பொருள் · Meaning in Tamil

வேலை ஒளித்தஉயர்குன்றம் - கடலில் இந்திரனுக்குப் பயப்பட்டு மறைந்திருந்த பெரியமலை; உந்தாமுன் - உந்திக் கொண்டு வருவதற்குள்; உலைந்து சிந்தா குலம் உற்றது - அச்சமடைந்து மனத்தில் மயக்கம் அடைந்தது; பின்னரும் - மறுபடியும்; தீர்வு இல்அன்பால் - ஒதுக்க முடியாத அன்புடன்; ஆண்டு - அவ்விடத்தில்; ஓர்சிறு மானிடவேடம் ஆகி - ஒப்பற்ற மனித வேடத்தை மேற்கொண்டு; வந்து ஓங்கி - அனுமனுக்கு எதிரே வந்து நிமிர்ந்து; எந்தாய் - என்னுடைய தந்தையே; இது கேள் என இன்ன இசைத்தது - இந்த மொழியைக் கேட்பாயாக என்று பின்வரும் சொற்களைக் கூறிற்று.

மைந்நாகமலை, அனுமன் உந்தித்தள்ள அதனால் மனமயக்கம் உற்று, மனித வடிவத்துடன் வந்து, இதைக்கேள் என்று இம் மொழியைக் கூறிற்று. உலைதல் - அச்சம் அடைந்து, சிந்தாகுலம் - மனமயக்கம். இன்ன - இந்த, அன்றே - அசை. சிந்தாகுலம் உற்று என்னைகொல் வாட்டத் திருத்தியதே (திருக்கோவையார்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lofty mountain that had hidden in the sea, shaken before it could even be pushed aside,
  2. was filled with distress; then, out of a love that would not end,
  3. it came up again, took there the small form of a man,
  4. and said these words: “My lord! Hear this!”

What the poem says

Maiṉṉākam, which had hidden in the ocean from Intiraṉ, is shaken and upset by Aṉumaṉ's shove. But it means him only good, so it rises again, takes a small human form, and calls out respectfully to him to listen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1untāmuṉ ulaintu uyar vēlai oḷitta kuṉṟam
cintākulam uṟṟatu; piṉṉarum tīrvil aṉpāl
vantu ōṅki āṇṭu ōr ciṟu māṉiṭa vēṭam āki
'entāy! itu kēḷ! 'eṉa iṉṉa icaittatu aṉṟē.