கம்பராமாயணம் 4842 · சுந்தர 2.54

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வேற்றுப் புலத்தோன் அலன், ஐய! விலங்கல் எல்லாம்
மாற்றுச் சிறை என்று, அரி, வச்சிரம் மாண ஓச்ச,
வீற்றுப்பட நூறிய வேலையின், வேலை உய்த்துக்
காற்றுக்கு இறைவன் எனைக் காத்தனன், அன்பு காந்த. '

பொருள் · Meaning in Tamil

ஐய - தலைவனே!; வேற்றுப் புலத்தோன் அலென் - யான் வேறுபட்ட நாட்டைச் சார்ந்தவன் அன்று; அரி - பகைவர்களை அழிக்கும் இந்திரன்; விலங்கல் எல்லாம் சிறை - எல்லா மலைகளின் சிறகுகளை; மாற்று என்று - அழிப்பாயாக என்று கூறி; வச்சிரம் மாண ஓச்ச - வச்சிராயுதத்தைச் சிறப்பு உண்டாக வீசி, வீற்றுப்பட நூறிய வேலையின் - தனித் தனியாகச்சிதைத்த காலத்தில்; அன்பு காந்த - அன்பு விளங்கும்படியாக; எனைக்காற்றுக்கிறைவன் - என்னை வாயு பகவான்; வேலை உய்த்துக் காத்தனன் - கடலிலே தள்ளிக் காப்பாற்றினான். என்னைப் பகைவன் என்று கடியற்க; இந்திரன் மலைகளின் சிறகுகளை அரிந்த காலத்து உன் தந்தையால் பாதுகாக்கப் பெற்றவன் என்று மைந்நாகமலை கூறியது. வேற்றுப் புலத்தோன் - பகைவர் நாட்டவன். வேற்றுப் புலத்திறுத்து (புறம் - 31)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “I am no stranger from an enemy land, sir! When Ari, saying
  2. ‘Their wings must go,’ swung his thunderbolt with all his might against the mountains
  3. and smashed them one by one, at that time the Lord of the Winds,
  4. his love shining forth, thrust me into the sea and saved me.”

What the poem says

Maiṉṉākam explains who it is. It is not an enemy. Long ago Intiraṉ (Ari) decided to strip all the mountains of their wings and cut them off one by one with his thunderbolt. At that time the Wind god, Aṉumaṉ's own father, pushed Maiṉṉākam into the sea out of affection and so saved it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vēṟṟup pulattōṉ aleṉ, aiya! vilaṅkal ellām
māṟṟuc ciṟai eṉṟu, ari, vacciram māṇa ōcca,
vīṟṟuppaṭa nūṟiya vēlaiyiṉ, vēlaiyuyttuk
kāṟṟukkiṟaivaṉ eṉaik kāttaṉaṉ, aṉpu kānta. '