கம்பராமாயணம் 4843 · சுந்தர 2.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உயர்விற்கும்உயர்ந்த தோளாய் - உயர்ந்துள்ளபொருள்கள் அனைத்திலும் உயர்ந்த தோள்களையுடையவனே; அன்னான் - அந்த வாயு தேவனுடைய; அருங்காதலன் ஆதலின் - அருமை மைந்தன் நீ ஆகையால்; அன்பு தூண்ட - அவன்பால் யான் கொண்ட அன்பானது உந்தித்தள்ள; ஈண்டு என்னால் உனக்கு - இங்கே என்னால் உனக்கு; செயற்கு உரித்து ஆயது இன்மை - செய்வதற்கு உரிய உபகாரம் வேறு இல்லாததால்; பொன்னார் சிகரத்து - பொன் நிரம்பிய சிகரத்தில்; இறை ஆறினை போதி என்னா - சிறிது இளைப்பாறிப் போவாய் என்று; உன்னா - நினைந்து; உயர்ந்தேன் - மேலே கிளர்ந்து வந்தேன்.
அனுமனே! எனக்கு உதவி செய்த வாயுதேவன் புதல்வன் நீ ஆகையினாலே உனக்கு உதவி செய்வதற்கு மேலே கிளர்ந்து வந்தேன் என்று மைந்நாகமலை கூறிற்று. ஆறினை - இளைப்பாறியவனாய்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Since you are his dear son, and love urges me on,
- and there is nothing else I can do for you here,
- I thought, ‘Let him rest a little on my golden peak and then go,’
- and so I rose up, O you whose shoulders rise above all that is high!”
What the poem says
Out of gratitude to the Wind god, Maiṉṉākam wants to do something for his son. The only kindness it can offer in the middle of the sea is a resting place, so it has risen to invite Aṉumaṉ to stop for a moment on its golden summit before going on.