கம்பராமாயணம் 4844 · சுந்தர 2.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீதி நின்றாய் - ஒழுக்கத்தில் நிலைத்து நிற்பவனே!; கார்மேக வண்ணன் - கருத்த மேகம் போன்ற நிறமுடைய இராமபிரானின்; பணி பூண்டனன் காலின் மைந்தன் - கட்டளை மேற்கொண்ட வாயுதேவனின் புத்திரன்; தேவர் உய்யச் சீதையைத் தேர்வான் வருகின்றனன் - தேவர்கள் வாழ வேண்டும் என்று சீதா பிராட்டியைத் தேடும்பொருட்டு வருகின்றான்; பேர் வான் அயல் சேறி - பெரிய ஆகாயத்தின் பக்கத்தில் சேர்வாயாக; இதில் - இதைவிட; பெரும்பேறு இல் என்ன - பெரிய பாக்கியம் இல்லை என்று; என்னை - என்னிடத்தில்; நீர் வேலையும் உரைத்தது - நற்பண்பு வாய்ந்த கடலும் கூறிற்று.
இராமபிரானின் கட்டளை மேற்கொண்டு வாயு புத்திரன் சீதையைத் தேடி வருகின்றான். நீ அவனுக்கு உதவுக என்று கடல் கூறிற்று என்று மைந்நாகமலை பேசிற்று. பணி - கட்டளை; பூண்டனன் - முற்றெச்சம். கால் - காற்று. (வாயு தேவன்). நன்நெடுங்காலின் மைந்தன் நாமமும் அனுமன் (சுந - உரு 31)
ஆங்கிலம் · English translationAI
Translation
- “‘Taking on the service of the one whose hue is the dark rain cloud, the Wind's son
- is coming to search for Cītai so that the gods may be saved;
- rise up beside the great sky; there is no greater blessing than this,’
- so even the Ocean told me, O you who stand firm in righteousness!”
What the poem says
Maiṉṉākam adds that it was the Ocean god himself who sent it. The Sea told it that the Wind's son was coming on Irāmaṉ's errand to find Cītai, for the good of the gods, and that there could be no greater privilege than to rise and help him.