கம்பராமாயணம் 4845 · சுந்தர 2.57

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நல் தாயினும் நல்லன் எனக்கு இவன்! என்று நாடி
இற்றே, இறை! எய்தினன்; ஏயது கோடி என்னால்;
பொன்தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த போதே
உற்றார்செயல் மற்றும் உண்டோ? 'என உற்று உரைத்தான்.

பொருள் · Meaning in Tamil

பொன்தார் அகல்மார்ப - பொன்மாலை அணிந்த விரிந்த மார்பை உடையவனே; இவன் - இந்த அனுமன்; எனக்கு நற்றாயினும் நல்லன் - என்னிடம் பெற்ற தாயைவிட அன்புடையவன்; என்று நாடி இற்றே இறை எய்தினை - என்று ஆராய்ந்து இங்கே சிறிது வந்து; என்னால் ஏய்ந்தது கோடி - என்னால் தரக்கூடியதை ஏற்றுக் கொள்வாயாக; தம் இல்உழை வந்த போதே - (விருந்தினர்) தம்முடைய வீட்டிற்கு வந்த உடனே; உற்றார் செயல் மற்றும் உண்டோ - வீட்டுக்கு உரியவர்களின் செய்கை (விருந்தோம்பலைவிட) வேறு இருக்க முடியுமோ?; என உற்று உரைத்தான் - என்று அனுமனை அடைந்து கூறினான்.

நான், தாயினும் சிறந்தவன் என்று கருதி என்பால் வந்து தங்கி என்னுடைய உபசாரத்தை ஏற்றுக்கொள். விருந்தினர் வந்தால் உபசரிப்பதை விட இல்லறத்தார்க்கு வேறு கடமை உண்டோ என்று மைந்நாகமலை கூறிற்று. நற்றாய் - பெற்ற தாய். கோடி - கொள்க. கொள் தி - கோடி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Considering, ‘This one is kinder to me than my own mother,’
  2. come here for a little while, and accept what I can offer;
  3. O you of broad chest with golden garland, when guests come to one's home,
  4. what other duty does the householder have?” So it drew near and spoke.

What the poem says

Maiṉṉākam presses its invitation warmly. Aṉumaṉ should think of it as kinder than a mother, stop for a moment and accept its hospitality. When a guest arrives, it says, the householder has no higher duty than to receive him well. Welcoming guests is one of the core duties of the householder in Tamil ethics.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'naṟṟāyiṉum nallaṉ eṉakku ivaṉ! eṉṟu nāṭi
iṟṟē, iṟai! eytiṉai; ēyntatu kōṭi eṉṉāl;
poṟṟār akal mārpa tam illuḻai vanta pōtē
uṟṟārceyal maṟṟum uṇṭō? 'eṉa uṟṟu uraittāṉ.