கம்பராமாயணம் 4846 · சுந்தர 2.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வீரன் - வீரனான அனுமான்; உரைத்தான் உரையால் - உபசார வார்த்தைகளைக் கூறிய மைந்நாகமலையின் மொழியால்; இவன்ஊறு இலன் என்பது உன்னி - இவன் குற்றமற்றவன் என்பதை அறிந்து; விரைத் தாமரை வாள்முகம் - மணமிக்க தாமரை போன்ற ஒளிமிக்க முகமானது; விட்டு விளங்க - நன்றாக ஒளி வீசும்படி; அளவே சிரித்தான் - புன்னகை செய்து; சிறிது அத்திசை செல்ல நோக்கி - மெல்ல மொழி வந்த திசையில் நன்றாகப் பார்த்து; வரைத்தாள் நெடும் பொன் குடுமித்தலை - மூங்கில் வளர்ந்த சாரலைப் பெற்ற மைந்நாகமலையின் நீண்ட பொன்மயமான சிகரத்தை, மாடு கண்டான் - பக்கத்தில் பார்த்தான்.
மைந்நாகமலையின் மொழியால் இவன் நல்லவன் என்பதை அறிந்த அனுமான் புன்னகை செய்து நன்றாக நோக்கி மைநாக மலையின் சிகரத்தைப் பார்த்தான். உன்னி - அறிந்து. இவ்வழி நோக்கும் என்பதை உன்னவர் (ஆரண்ய - சூர்ப்ப - சூழ்ச்சி 8) விட்டு விளங்கல் - நன்றாகப் பிரகாசிக்க (சென்னை - பல் - கழக அகராதி) தாள் - சாரல்; தாள் உயர்தடங்கிரி (கம்ப - 829).
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the words of the one who spoke, realising that he meant no harm,
- the hero, his bright face like a fragrant lotus breaking into radiance,
- smiled just a little, looked carefully in that direction,
- and saw nearby the tall golden crest atop the mountain's slopes.
What the poem says
From Maiṉṉākam's words Aṉumaṉ understands that it is a friend, not an obstacle. His lotus face lights up in a slight smile, and he looks toward the voice and sees the mountain's golden summit close beside him.