கம்பராமாயணம் 4847 · சுந்தர 2.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மைநாகமலையைப்பார்த்து அனுமான், வருந்தேன் - நான் பறந்து வந்ததால் சோர்வு அடையேன்; அது - அதற்குக் காரணம்; என்துணை வானவன் வைத்த காதல் - எனக்கு ஆதரவாக இருக்கும் இராமபிரான் என்பால்கொண்ட அன்பாகும், இனி - இப்போது; என் ஆசை நிரப்பி அல்லால் - என் விருப்பம் நிறைவேறினால் அல்லாமல்; யாதும் அருந்தேன் - எதையும் உண்ணமாட்டேன்; பெருந்தேன் பிழி சாலும் நின் அன்பு - பெரியதேனின் பிழிவினை ஒத்த உன்னுடைய அன்பானது; பிணித்த போதே - கட்டிப் பிடித்த அப்பொழுதே, இருந்தேன் - உன் வீட்டில் தங்கி, நுகர்ந்தேன் - உண்டவன் ஆனேன்; இனி இதன்மேல் ஈவது என்னோ - இப்போது இதற்குமேல் கொடுக்கக்கூடிய பொருள் யாது? இராமபிரான் என்பால் வைத்த கருணையால் யான் சோர்வு அடையமாட்டேன். என்னுடைய விருப்பம் நிறைவேறினால் அல்லாமல் எதையும் உண்ணேன். உன் அன்பு என்னைப் பிணித்து விட்டது. அதனாலேயே உண்டவன் ஆனேன். இனிமேல் தருவதற்கு யாதுளது என்று அனுமன் கூறினான். நிரப்புதல் - நிறைவேறுதல். நிற்றேடி வருந்த நிரப்பினையோ (கம்ப. 30611) பெருந்தேன் - மலைத்தேன் (குறுந்தொகை 3)
ஆங்கிலம் · English translationAI
Translation
- “I am not weary; that is the love my divine companion has placed in me;
- I will taste nothing at all from now on until I have fulfilled my desire;
- the moment your love, as rich as pressed honey from a great hive, bound me,
- I stayed with you and feasted; what more could you give than this?”
What the poem says
Aṉumaṉ declines the invitation kindly. He is not tired, because Irāmaṉ's love sustains him, and he has vowed to take nothing until his mission is accomplished. Still, the mountain's affection, sweet as wild honey, has touched him so deeply that it is as if he had already stayed and eaten his fill. What more could any host offer?