கம்பராமாயணம் 4848 · சுந்தர 2.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காதல் முற்ற - அன்பானது நிறைவு பெறுவதாலே; முன்பிற் சிறந்தார் - முற்காலத்தே சிறந்திருந்த தலையேழு வள்ளல்களும்; இடையுள்ளவர் - இடையேழு வள்ளல்களும்; பின்பிற் சிறந்தார் - பிற்காலத்தே சிறந்திருந்த கடையெழு வள்ளல்களும் (மேற்கொண்ட); குணம் நன்று - பண்பாகிய அன்பு பெரியது; இது பெற்ற யாக்கைக்கு - இந்த அன்பைப் பெற்றிருக்கும் உடம்புக்கு; என்பிற் சிறந்து ஆயதோர் - எலும்பைவிடச் சிறப்புற்ற; ஊற்றம் உண்டு - வலிமையுள்ளது; என்னல் ஆம் - என்று கூறுவது தகுதியுடையது தான்; அன்பின் சிறந்தாய தோர் - அன்பைவிடச் சிறப்புற்ற; பூசனை - வழிபாடு; யார்கண் உண்டு - எவர்பால் உள்ளது? மூவகை வள்ளல்கள் பெற்றிருந்த அன்பு மிகப் பெரியது. இந்த அன்பைப் பெற்றுள்ள உடம்புக்கு எலும்பைவிடச் சிறந்த வலிமை உள்ளது. அன்பைவிடச் சிறந்த வழிபாடு கிடையாது. என்பினும் சிறந்தது அன்பு என்க. ஆதலின் ததீசி அன்புக்காக என்பை வழங்கினான். வலிமையுள்ளவர்பால் அன்பு கொள்வது சிறந்ததே என்பது கருத்து.
அன்பிற் சிறந்த பூசனையில்லை என்ற உயர்ந்த கருத்து இங்கே உரைக்கப்படுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The great patrons of the first age, those of the middle, and the great ones of later times
- were great through love brought to fullness; this is the good quality! For a body that has it,
- can one say there is any strength greater than the bones?
- With whom is there any worship greater than love?”
What the poem says
Aṉumaṉ praises love as the highest virtue. The three famous groups of seven generous patrons in Tamil tradition, early, middle and late, were great because of the love behind their giving. A body that holds love has a strength beyond that of bone, and there is no worship higher than love. The commentary recalls the sage Dadhīci, who gave his own bones out of love so that the gods could make a weapon from them.