கம்பராமாயணம் 4849 · சுந்தர 2.61

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஈண்டே கடிது ஏகி, இலங்கை விலங்கல் எய்தி,
ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றலின் ஆற்றல் உண்டே?
மீண்டால் நுகர்வேன் நின் விருந்து 'என வேண்டி, மெய்ம்மை
பூண்டான் அவன் கண்புலம் பிற்பட, முன்பு போனான்.

பொருள் · Meaning in Tamil

மெய்ம்மைபூண்டான் - உண்மையை ஆபரணமாக அணிந்த மாருதி (மைநாகத்தைப் பார்த்து); ஈண்டே - இப்பொழுதே; கடிது ஏகி - வேகமாகச் சென்று; இலங்கை விலங்கல் எய்தி - இலங்கைத் தீவில் உள்ள திரிகூட மலையை அடைந்து; ஆண்டான் அடிமைத் தொழில் - இராமபிரானுக்கு அடிமைப் பணியை; ஆற்றலின் ஆற்றல் உண்டே - செய்வதில் வலிமை உள்ளதே?; மீண்டால் - திரும்பி வந்தால்; நல் விருந்து நுகர்வேன் என வேண்டி - உன்னுடைய விருந்தை உண்பேன் என்று சொல்லி; அவன் கட்புலம் பின்பட - அந்த மைநாகனின் பார்வையானது பின்னே தொடர; முன்பு போனான் - முன்நோக்கிப் பறந்து சென்றான்.

யான் இலங்கையை அடைந்து பெருமானின் பணி செய்து மீண்டால் உன் விருந்தை ஏற்பேன் என்று கூறி அனுமன் சென்றான். இலங்கையில் உள்ள திரிகூட மலையே இராவணனின் இருப்பிடம். “இலங்கை வெற்பில்... நங்கையைக் கண்டேன்” என்று பின்னே பேசப்படும். விருந்து என்பது இங்கே உண்டியை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Going swiftly from right here and reaching the mountain of Ilaṅkai,
  2. is there any strength greater than the strength to do the slave's service of my Master?
  3. When I return, I shall enjoy your fine feast,” he asked, and he who wears truth
  4. went on ahead, leaving the mountain's gaze behind him.

What the poem says

Aṉumaṉ, whose ornament is truth, tells Maiṉṉākam that his real strength lies in serving his master Irāmaṉ as a devoted servant, and that he must hurry on to the mountain of Ilaṅkai. He promises to accept the feast on his way back. Then he flies off, and the mountain gazes after him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'īṇṭē kaṭitu ēki, ilaṅkai vilaṅkal eyti,
āṇṭāṉ aṭimait toḻil āṟṟaliṉ āṟṟal uṇṭē?
mīṇṭāl nukarveṉ nal viruntu 'eṉa vēṇṭi, meymmai
pūṇṭāṉ avaṉ kaṭpulam piṟpaṭa, muṉpu pōṉāṉ.