கம்பராமாயணம் 4851 · சுந்தர 2.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருக்கனும் - சூரியனும்; நீர் மா கடல்மேல் - நீரைப் பெற்ற பெரிய கடலைவிடப் பெரிதாக, நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா - உயர்கின்ற உயர்ச்சியைப் பார்த்து; பார்மேல் தவழ் சேவடி - பூமியிலே தவழ்கின்ற சிவந்த பாதங்கள்; பாய் நடவாப் பதத்து - பூமியிலே பதிந்து நடவாத பருவத்திலே; என் தேர்மேல் குதி கொண்டவன் - என்னுடைய தேரிலே குதித்த இந்த அனுமன்; இத்திறன் - இப்படி; ஆர்மேல் சிந்தை செய்தான் கொல் - எவர்மேல் பாயக் கருதுகிறானோ; என்று எண்ணி - என்று கருதி; ஐயம் உற்றான் - சந்தேகம் அடைந்தான்.
அனுமன் கடலைவிடப் பெரிதாக வளரும் உயர்ச்சியை நோக்கிய சூரியன், தவழ்கின்ற பருவத்தில் என் தேர்மேல் பாய்ந்தான். இப்போது யார்மேல் பாய்கின்றானோ என்று ஐயம் உற்றான். பெரிய பொருளுக்கு உவமையாக்கப்படுவது கடல். அதனால் கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி என்பதற்கு இங்ஙனம் கூறப்பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing him rise up taller than the great watery sea,
- even the Sun grew uneasy, thinking, “He who leapt onto my chariot
- when his red feet still crawled on the earth and had not yet learned to walk,
- now has his mind set like this: on whom can it be?”
What the poem says
The Sun watches Aṉumaṉ swell larger than the ocean and grows nervous. He remembers that when Aṉumaṉ was a baby who could only crawl, he leapt at the Sun's own chariot, thinking it was a fruit. If the infant did that, whom is the grown giant about to pounce on now?