கம்பராமாயணம் 4852 · சுந்தர 2.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாள்ஒத்துஒளிர்வால் எயிறு - வாளைப் போலப்பிரகாசிக்கும் வெண்மையான பற்கள்; மருங்கு ஊழின் இமைப்ப - பக்கத்தில் முறையாக ஒளிவீச; நீள்ஒத்து உயர் வாலின் - நீளத்தைப் பெற்று உயர்ந்த வாலினாலே; விசும்பு நிரம்பு - ஆகாயத்தை நிறைவுபெறச் செய்யும்; மெய்யன் - சத்திய வடிவான அனுமனின்; கோள் ஒத்த பொன்மேனி - வலிமை மிக்க பொன்னிறமான திருமேனி; விசும்பு இரு கூறு செய்யும் - ஆகாயத்தை இரண்டு விதமாகக் கூறுபடுத்தும்; நாள் ஒத்தது - நாளைப் போன்றிருந்தது; ஞாலம் - உலகமானது; மேல் ஒளி கீழ் இருள் உற்ற - மேலே ஒளியையும் கீழே இருளையும் அடைந்த.
அனுமனின் திருமேனியின் விரிவால் பூமியில் இருள் உண்டாயிற்று. அவனுக்கு மேலே ஒளி இருந்தது. ஆதலால் அவன் ஒளியையும் இருளையும் உண்டாக்கும் நாளைப் போன்றிருந்தான். மெய்யன் என்பதற்கு உடம்பைப் பெற்றவன் என்று கூறின், வானை நிரப்பியது வாலா, மேனியா என்னும் ஐயப்பாடும் இவனுக்குக் குறைவும் உண்டாக்கும். ஆதலின் மெய்யன் என்பது அனுமன் என்று கூறப்பட்டது. 'மெய்ம்மை பூண்டான்' என்று 61-ஆம் பாடல் பேசும். கோள் - வலிமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His white teeth gleaming like swords flashing in rows at the sides of his mouth,
- the Truthful One, who filled the sky with his long, lofty tail,
- had a mighty golden body like the day that splits the sky in two:
- the world had light above and darkness below.
What the poem says
Aṉumaṉ's golden body is so vast that it acts like the boundary between day and night: above him the sky is bright, while below, in his shadow, the earth lies in darkness. The commentary takes meyyaṉ to mean "the Truthful One", Aṉumaṉ himself, rather than simply "the one with the body".