கம்பராமாயணம் 4879 · சுந்தர 2.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன்) அடிமண் உற்று - கீழ்ப்பாகம் பூமியில் பொருந்தி; மீதுவான் உறும் - மேலே உள்ள ஆகாயத்தைப் பொருந்தியிருக்கும்; வரம்பின் தன்மை - எல்லையின் தன்மை; எண்அடி அற்ற - நினைக்க வியலாத, குன்றில் - பவளமலையில், நிலைத்து நின்று - ஊன்றி நின்றுகொண்டு; விண்ணிடை உலகம் - வானத்தில் உள்ள தேவலோகம்; என்னும் மெல்லியல் - என்னும் பெண்ணானவள்; மேனி நோக்க - தன்னுடைய உடம்பைப் பார்ப்பதற்கு; கண்ணடி வைத்தது அன்ன - கண்ணாடி வைத்தாற்போன்று; இலங்கையை - இலங்கை மாநகரை; எய்த நோக்கி - நன்றாக ஆராய்ந்து; தெரியக் கண்டான் - கண்களாற் பார்த்தான்.
வரம்பு - எல்லை (சிகரம்). எய்த நோக்கி - நன்றாக ஆராய்ந்து. இருவரை எய்த நோக்கி (கம்ப. 375)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Standing firm on a hill whose foot rests on the earth and whose top touches the sky,
- a height beyond the reach of thought, and looking closely,
- he clearly saw Ilaṅkai, which was like a mirror set up
- for the gentle lady, the world of heaven, to look at her own body.
What the poem says
Aṉumaṉ plants himself on the coral hill, whose base is on the earth and whose summit reaches the sky, and studies the city below. Ilaṅkai is so splendid that it seems like a mirror placed there for heaven, pictured as a graceful woman, to admire her own beauty in.