கம்பராமாயணம் 4878 · சுந்தர 2.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மேக்கு உறச்செல்வோன் - ஆகாயத்தில் வேகமாகப்போகும் அனுமன்; பாய - குதித்தலினால்; வேலைமேல் இலங்கை - கடலின் மேல் உள்ள இலங்கை; வெற்பு - மலை; நூக்கு உறுத்து - தள்ளப்பட்டு; அங்கும் இங்கும் தள்ளுற - அங்கும் இங்குமாகத் தள்ளப்பட்டு; நுடங்கும் நோன்மை - நுடங்குகின்ற தன்மையால்; போக்கினுக்கு - பயணம் செய்வதற்கு; இடையூறாக - தடையாக; புயலொடு பொதிந்த வாடை தாக்குற - மேகத்துடன் கூடி வாடைக் காற்று மோத, தகர்ந்து சாயும் - சிதைவுபட்டு அங்கும் இங்கும் சாய்கின்ற; கலம் எனத் தக்கது - கப்பல் என்று கூறப் பொருந்தியது.
அனுமன்பாய்வதால் தள்ளாடும் இலங்கை புயற் காற்றால் அடிபட்டு நிலைகுலையும் கப்பலைப் போன்றிருந்தது. மேக்கு - ஆகாயம். நூக்குறுத்து - தள்ளப்பட்டு. அன்று, ஏ - அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he who travelled high leapt down, the mountain of Ilaṅkai upon the sea
- was shoved and pushed this way and that, and the way it reeled
- was fit to be called a ship that, struck by a north wind laden with storm clouds
- that bars its passage, is battered and heels over.
What the poem says
Aṉumaṉ lands with such force that the mountain on which Ilaṅkai stands is pushed about and sways back and forth in the sea. It looks like a ship battered by a storm wind, rolling from side to side.