கம்பராமாயணம் 4877 · சுந்தர 2.89

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தசும்பு உடைக் கனகம் நாஞ்சில் கடிமதில் தணித்து நோக்கா,
அசும்பு உடைப் பிரசத் தெய்வக் கற்பக நாட்டை அண்மி,
விசும்பு இடை செல்லும் வீரன் விலங்கி வேறு, இலங்கை மூதூர்ப்
பசும் புடைச் சோலைத்து ஆங்கோர் பவள மால் வரையில் பாய்ந்தான்!

பொருள் · Meaning in Tamil

பிரசம் அசும்புடை - தேன்கசிதலைப் பெற்ற; தெய்வக் கற்பக நாட்டை அண்மி - கற்பக மரங்கள் செழித்த தேவலோகத்தை எட்டி; விசும்பு இடைச் செல்லும் வீரன் - ஆகாயத்தே செல்லும் அனுமன்; தணித்து - வேகத்தைக் குறைத்து; தசும்புடை - குடங்களைப் பெற்றுள்ள; கனக நாஞ்சில் - பொன்மயமான ஏப்புழை அமைந்த; கடிமதில் - காவலுடன்கூடியமதிலை; நோக்கா - பார்த்து; வேறு விலங்கி - செல்லும் வழியை மாற்றிக் கொண்டு; மூதூர் இலங்கை - பழைய ஊராகிய இலங்கையிலுள்ள; பசும்சுடர்சோலைத்து - பசுமையான ஒளியை உடைய; ஆங்கு ஓர் - சோலையின் ஒருபக்கத்தில் உள்ள; பவளமால் வரையில் - பவளமலையில்; பாய்ந்தான் - குதித்தான். அனுமன் இலங்கையின் மதிலைப் பார்த்து, வேகத்தைக் குறைத்துக்கொண்டு செல்லும் வழியை மாற்றிக்கொண்டு பவள மலையில் குதித்தான். விசும்பிடைச் செல்லும் வீரனின் காட்சியும் சிந்தனையும் (89-195 பாடல்வரை). தசும்பு - கோபுரங்களில் உள்ள கலசம். நாஞ்சில் பொன் மயமாய் இருக்கும் போலும். இலங்கை முதல் ...... கனக நாஞ்சில் என்று முன்பு கூறப் பெற்றது. (கம்ப. 4742).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Slowing down, he looked at the guarded wall with its golden battlements topped with finials;
  2. then the hero who travels the sky, having come near the divine land of the kaṟpakam trees that drip honey,
  3. turned aside onto another course, and in the ancient city of Ilaṅkai
  4. leapt down onto a great coral mountain set among groves of green radiance.

What the poem says

Aṉumaṉ arrives. Flying so high that he has neared the gods' paradise, where the wish-granting kaṟpakam trees drip honey, he slows down as he sights the guarded walls of Ilaṅkai with their golden battlements and pinnacles. Instead of heading straight for the wall he changes course and lands on a coral-red hill amid green, shining groves within the old city. The leap across the sea is over.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tacumpuṭaik kaṉaka nāñcil kaṭimatil taṇittu nōkkā,
acumpuṭaip piracat teyvak kaṟpaka nāṭṭai aṇmi,
vicumpiṭaic cellum vīraṉ vilaṅki vēṟu, ilaṅkai mūtūrp
pacum cuṭarc cōlaittu āṅkōr pavaḷa māl varaiyil pāyntāṉ!