கம்பராமாயணம் 488 · பால 9.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'யாமும் அவ் வயின் வருதும், நீர் கதும் என எழுந்து
போமின்,' என்று அருள் புரிதலும், இறைஞ்சினர் புகழ்ந்தார்,
'நாமம் இன்று' எனக் குனித்தனர்,'நல்குரவு ஒழிந்தது
ஆம்' எனும் பெரும் களி துளக்கு உறுத்தல் ஆல் அமரர்.
பொருள் · Meaning in Tamil
நாமம் - அச்சம்; துளக்குறுதல் - ஆட்டுதல்; குனித்தனர் - கூத்தாடினர்.
பாற்கடல் கடையுங்கால் தானும் துணை வருவதாகக் கூற, அத்தேவர் மகிழ்ந்து இனித் தம் வறுமை அகலுமென்று துணிந்து கூத்தாடினர் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'We too shall come to that place; rise up at once
- and go,' he graciously said; they bowed and praised him,
- and danced, saying, 'Today there is no fear; our poverty is ended,
- surely!' — so did the immortals sway in their great joy.
What the poem says
Tirumāl promises that he will come in person and help with the churning, and tells the gods to set off at once. Sure now that their poverty is over and they have nothing more to fear, the gods bow, praise him and dance for joy.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yāmum av vayiṉ varutum, nīr katumeṉa eḻuntu
pōmiṉ,' eṉṟu aruḷpuritalum, iṟaiñciṉar pukaḻntu,
'nāmam iṉṟu' eṉak kuṉittaṉar,' nalkuravu oḻintatu
ām' eṉum peruṅ kaḷi tuḷakkuṟutalāl amarar.