கம்பராமாயணம் 489 · பால 9.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மலை பிடுங்கினர், வாசுகி பிணித்தனர், மதியம்
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்,
அலை பெறும்படி பயோததி கடைந்தனர், அவனி
நிலை தளர்ந்திட அனந்தனும் கீழ் உற நெளித்தான்.
பொருள் · Meaning in Tamil
பயோததி - பயஸ் - பால்; உததி- கடல்; பாற்கடல்; அனந்தன் - பிரளய காலத்தும் அழிவில்லாமல் என்றும் ஒரு தன்மையாக நித்தியனாயிருப்பவன்; இவன் பூமியின் கீழ் இருந்து ஆயிரந்தலைகளாலும் பூமியைத் தாங்குகின்றான் என்பது நூற்கொள்கை.
தேவர்களும் அசுரர்களும் கடல் கடையப் பூமி நிலைகுலைய ஆதிசேடனாகிய பாம்பும் உடல் நெளித்தான் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They uprooted the mountain, bound Vācuki round it, planted the moon
- so that it stood firm; they laid in the herbs in rows;
- they churned the milk ocean till it heaved with waves; and as the earth
- lost its footing, Aṉantaṉ too writhed down below.
What the poem says
The churning begins. The gods and asuras pull up Mount Mantaram, wind Vācuki round it, fix the moon as its post and throw in the herbs. The Ocean of Milk heaves, and the earth shakes so hard that Aṉantaṉ (Ādiśeṣa) squirms beneath it. He is the undying thousand-headed serpent who holds up the earth on his hoods and lasts even through the dissolution of the world.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malai piṭuṅkiṉar, vācuki piṇittaṉar, matiyai
nilai peṟumpaṭi naṭṭaṉar; ōṭati niraittār,
alai peṟumpaṭi payōtati kaṭaintaṉar, avaṉi
nilai taḷarntiṭa aṉantaṉum kīḻuṟa neḷittāṉ.