கம்பராமாயணம் 490 · பால 9.24

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திறல் கொள் ஆமையாய், முதுகினில் மந்தரம் திரிய,
விறல் கொள் ஆயிரம் தட கைகள் பரப்பி மீ வலிப்ப,
மறன் இலா முனி வெகுளியின் மறைந்தன வரவே,
அறன் நிலார் மனத்து அடையலா நெடும் தகை அமைத்தான்.

பொருள் · Meaning in Tamil

மறன் இல் ஆம் - கோபத்துக்கு இடமான; மறன் நில்லா - கோபம் மனத்தில் அடங்கி நிற்கப் பெறாத; மறன் நிலாம் - கோபம் உலாவி விளங்குதற்கு இடமான.

திருமால் ஆமை வடிவெடுத்துத் தன் முதுகின் மேல் மந்தர மலை சுழலும்படி, மந்தர மலையை மேலே அழுத்தும்படி ஆயிரம் கைகளைப் பரவச்செய்தும் நீங்கின பொருள்கள் மீண்டு வர உதவினான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Becoming a mighty tortoise, so that Mantaram turned upon his back,
  2. and spreading a thousand strong, broad arms to hold it down from above,
  3. so that what had vanished through the wrath of the sage in whom anger dwells might come back,
  4. the great one, whom unrighteous minds can never reach, set all this in order.

What the poem says

As the mountain begins to sink, Tirumāl takes the form of a great tortoise and holds it on his back so that it can turn. At the same time, with a thousand arms, he presses it down from above to keep it steady. In this way he helps bring back everything lost to the curse of the angry sage. The commentary reads the phrase about the sage in three ways, all meaning one in whom anger lives and cannot be held in.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiṟal koḷ āmai ām, mutukiṉil mantaram tiriya,
viṟal koḷ āyiram taṭak kaikaḷ parappi mī valippa,
maṟaṉ nilām muṉi vekuḷiyāl maṟaintaṉa varavē,
aṟaṉ ilā maṉattu aṭaikilā neṭun takai amaittāṉ.