கம்பராமாயணம் 4881 · சுந்தர 2.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேண்டிய வேண்டின் எய்தி - விரும்பிய பொருள்களை விரும்பியபடி பெற்று; வெறுப்பு இன்றி - வெறுப்பு இல்லாமல்; விழைந்து துய்க்கும் - விரும்பி அனுபவிக்கும்; ஈண்டு அரும் போக இன்பம் - இங்கே கிடைக்காத போகத்தின் இன்பமானது; ஈறு இலது யாண்டுக் கண்டாம் - முடிவின்மையை எங்கு பார்க்கின்றோமோ; ஆண்டு அது துறக்கம் - அவ்விடத் திருப்பதே சுவர்க்க நகர்; அது - அந்தக் கருத்து; அருமறைத் துணிவும் - அருமையான வேதங்களின் கருத்தாகும்; (ஆதலால் மாண்டது ஓர் நலத்திற்றாம் என்று - மாண்புமிக்க நன்மையை உடையதாம் என்று (சுவர்க்கத்தை); உணர்த்துதல் வாய்மைத்து அன்று - அறிவித்தல் உண்மையொடு கூடியதன்று.
வேண்டியதை அடைந்துவாழும் இடம் சுவர்க்கம் என்பது வேதம் உடன்பட்ட உண்மை. (அவ்வின்பம்) இலங்கையில் உள்ளது. தேவலோகத்தில் இல்லை. ஆதலின் இலங்கையினும் அமராவதி உயர்ந்தது என்று கூறுதல் உண்மையாகாது. அமராவதியில் உள்ளவர்கள் இராவணனுக்கு அடிமைப்பணி செய்கின்றனர் அவர்கள் வேண்டியவை எட்டாப்பொருள் ஆதலின் அது துறக்கம் அன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To proclaim that heaven holds some surpassing good is not the truth!
- To gain whatever one desires, just as one desires it, and to enjoy it with longing and without surfeit —
- wherever we see such bliss of pleasure, rare to find elsewhere, and without end,
- there is heaven! That is the settled teaching of the rare Vedas too, ah!
What the poem says
Aṉumaṉ has leapt the ocean and, from a hill outside Ilaṅkai, gazes at the city before entering it. These closing verses of the canto record his amazement.
He reasons that heaven is, by the Vedas' own definition, the place where every wish is fulfilled and enjoyed without end. That bliss is found here in Ilaṅkai, not in the gods' city Amarāvati, whose people now serve Irāvaṇaṉ as slaves. So to call Amarāvati the higher heaven would be untrue.