கம்பராமாயணம் 4922 · சுந்தர 3.40

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்
கடங்களும், கலினமா விலாழியும், கணக்கு இலாத
இடங்களின் இடங்கள் தோறும், யாறொடும் அடுத்த எல்லாம்,
அடங்கியது என்னின், என்னே, ஆழியின் ஆழ்ந்தது உண்டோ?

பொருள் · Meaning in Tamil

வடங்களும் குழையும் - ஆரங்களும், குண்டலங்களும்; பூணும் மாலையும் - ஆபரணங்களும் மாலைகளும்; சாந்தும் - சந்தனக் குழம்பும்; யானைக் கடங்களும் - யானைகளின் மும்மதங்களும்; கலின மா - கடிவாளம் பெற்ற குதிரைகளின்; விலாழியும் - வாய் நுரையும் (இன்னும்); கணக்கு இலாத - கணக்கிட முடியாதவையும்; இடங்களின் - வீடுகளின்; இடங்கள்தோறும் - விசாலமான இடப் பரப்புகள் தோறும்; யாற்றொடும் - ஆறுகளாக வந்தனவற்றோடும், எடுத்த எல்லாம் - எடுத்துக்கொண்டு வந்த எல்லாப் பொருள்களும்; அடங்கியது என்னில் - அடங்கிவிட்டது என்றால்; ஆழியின் ஆழ்ந்தது - கடலினும் ஆழமான நீர்நிலைகள்; உண்டோ - உள்ளதா; என்னே - என்ன அதிசயம்.

வடம் முதலியவும் ஆறுகள் கொண்டுவந்தனவும் அடங்கியது என்றால் கடலினும் ஆழமான பொருள் உண்டோ. இலங்கையில் கழித்த பொருள்கள் அடங்குவதால் கடல் பெரியதாம் என்று வியந்து பேசப்பெற்றது. யாறொடு - ஒடு - அசை. இன்றொடு நாளைக் குறுகவரும் கூற்று.... (புறப்பொருள் 270) அன்றி ஒடு உருபை ஆல் உருபாகக் கொள்ளலாம். அப்போது ஆற்றால் எடுக்கப்பெற்ற என்றும் பொருள் கிட்டும். இடம் - வீடு. இடமே பாத்தி... வீடு என்றிசைப்பர் (திவா - இடப்பெயற். குப்பை கொட்டும் பள்ளமே கடல் (வை. மு.கோ. உரை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Necklaces, earrings, ornaments, garlands, sandal paste, the musth
  2. of elephants, the foam from the mouths of bridled horses — beyond all count —
  3. all that the rivers carry off from house after spacious house,
  4. if it is all swallowed up, how wondrous! Is there anything deeper than the sea?

What the poem says

The rivers of Ilaṅkai carry the city's discarded luxuries down to the ocean: jewels, garlands, sandal paste, the musth of elephants and the foam from the horses' mouths, all in countless quantity.

If the sea can take in all of this, Aṉumaṉ marvels, nothing could be deeper. An older commentator puts it bluntly: the sea is simply the pit into which Ilaṅkai tips its rubbish.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭaṅkaḷum, kuḻaiyum, pūṇum, mālaiyum, cāntum, yāṉaik
kaṭaṅkaḷum, kaliṉamā vilāḻiyum, kaṇakku ilāta
iṭaṅkaḷiṉ iṭaṅkaḷ tōṟum, yāṟṟoṭum eṭutta ellām,
aṭaṅkiyatu eṉṉil, eṉṉē, āḻiyiṉ āḻntatu uṇṭō?