கம்பராமாயணம் 4921 · சுந்தர 3.39

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒறுத்தலோ நிற்க, மற்றோர் உயர்படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம்? மற்றும், யாவர்க்கும் இயக்கம் உண்டே?
கறுத்த வாள் அரக்கி மாரும், அரக்கரும், களித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கை யாலே தூரும் இவ் வீதியெல்லாம்!

பொருள் · Meaning in Tamil

ஒறுத்தலோ நிற்க - (படைகள்) பகைவர்களைக் கொல்வது கிடக்கட்டும்; மற்று ஓர் உயர்படைக்கு - வேறு ஒரு உயர்ந்த படைக்கு; ஒருங்கு இவ் ஊர் வந்து - ஒரு சேர இந்த ஊரைச்சார்ந்து; இறுத்தலும் எளிதாம் - தங்குவதும் எளிதான செயலே; கறுத்த வாள் - கோபம் கொண்ட கொடிய; அரக்கி மாரும் - அரக்கப் பெண்களும்; அரக்கரும் - அரக்கர்களும்; கழித்து - ஒதுக்கி; வீசிவெறுத்த - எறிந்த வெறுப்புக்கொண்ட; பூண் வெறுக்கையாலே - ஆபரணச் செல்வங்களால், தூரும் - மேடிட்டுக்கிடக்கும்; இவ் வீதி எல்லாம் - இந்த எல்லா வீதிகளிலும்; யாவர்க்கும் - எல்லார்க்கும், இயக்கம் உண்டே - இயங்குதல் முடியுமா ?.

அரக்கர்கள் இன்பம் உறும்போது இடையூறு என்று கருதி ஆபரணங்களை வீசி விட்டனர் (வால்மீகி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Never mind punishing foes — could any other great army come together into this city
  2. and easily make camp here? Indeed, could anyone even move about?
  3. The demon women and the demons of dark, cruel swords have stripped off and flung away
  4. in disgust their wealth of ornaments, and with it all these streets are choked!

What the poem says

Ilaṅkai is so crowded with riches that an invading army would struggle even to find room to camp, let alone fight.

The streets are blocked by heaps of jewellery that the demons and their women have torn off and thrown away as a nuisance during their pleasures, a detail the commentary traces to Vālmīki. Moving through the city at all would be hard.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṟuttalō niṟka, maṟṟu ōr uyarpaṭaikku oruṅku iv ūr vantu
iṟuttalum eḷitām? maṟṟum, yāvarkkum iyakkam uṇṭē?
kaṟutta vāḷ arakki mārum, arakkarum, kaḻittu vīci
veṟutta pūṇ veṟukkaiyālē tūrum iv vīti ellām!