கம்பராமாயணம் 4920 · சுந்தர 3.38

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வள்ளிநுண் மருங்குல் என்ன, வானவர் மருளின் உள்ளம்
தள்ளுறப் பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர்,
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம், வெள்குகின்றார்,
கள் இசை அரக்கர் மாதர் களித்திடும் குரவை காண்பார்!

பொருள் · Meaning in Tamil

வள்ளி நுண்மருங்குல் என்ன - கொடியை ஒத்த (தம்முடைய) இடையைப் போல; வானவர் மகளிர் - காணுகின்ற தேவர் மகளிரது; உள்ளம் தள்ளுற - மனமானது (ஊசல்) ஆடும்படி; தள்ளா - விலக்கப்படாத; பாணி - தாள ஒழுங்குக்கேற்ப; நடம்புரி - நாட்டியம் ஆடவல்ல; தடங்கண்மாதர் - நீண்ட கண்களையுடைய தேவமாதர்கள்; கள் இசை - கள் உண்டு பாடுகின்ற இசையுடைய; அரக்கர் மாதர் - அரக்கப் பெண்களின்; களியிடும் குரவை காண்பார் - (முறையற்ற) குரவைக் கூத்தைப் பார்ப்பதற்கு; வெள்ளிய முறுவல் தோன்றும் - வெண்பற்கள் சிறிதே தெரியும்படி; நகையர் - புன்னகை செய்தவராய்; வெள்குகின்றார்- நாணம் அடைகின்றனர்.

பாணி ஒழுங்கிற்கேற்ப ஆடவல்ல தேவமகளிர்கள் அரக்கியர்களின் (முறையற்ற) குரவைக் கூத்தைக் காண்பதற்கு நாணம் அடைகின்றனர். பாணி - தாள ஒழுங்கு. தாம் - உரையசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that, like their own slender vine-like waists, the hearts of heavenly women
  2. sway, the wide-eyed dancers who dance never straying from the beat,
  3. smiling so that their white teeth just show, are abashed
  4. as they watch the tipsy round-dance of the demon women singing in their cups!

What the poem says

The celestial dancers kept in Ilaṅkai are refined artists who never miss the beat. Their dancing makes the hearts of the other heavenly women sway like their own slender waists.

When they watch the demon women's drunken, unruly kuravai (a group round-dance), they smile faintly and are embarrassed by it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḷḷinuṇ maruṅkul eṉṉa, vāṉavar makaḷir uḷḷam
taḷḷuṟap pāṇi taḷḷā naṭam puri taṭaṅ kaṇ mātar,
veḷḷiya muṟuval tōṉṟum nakaiyar tām, veḷkukiṉṟār,
kaḷ icai arakkar mātar kaḷiyiṭum kuravai kāṇpār!