கம்பராமாயணம் 4919 · சுந்தர 3.37

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காதல் - அன்பினாலே; புள்உறத்தொடரும் - வண்டுகள் பின்பற்றிச் செல்லும்; மேனி - உடம்பிலே; புலால்உற - புலால் நாற்றம் நிரம்பும்படி; கடிது போவ - வேகமாகச் செல்பவையும்; வெள் உறுப்பு எயிற்ற - வெண்மையான நீண்ட தந்தங்களை உடையவையும்; செய்ய தலையன - சிவந்த தலையைப் பெற்றனவும்; கரிய மெய்ய - கருத்த உடம்பை உடையவையும்; உள்உறக்களித்த - ஊக்கமிகுதியால் செருக்குப் பெற்றவையும், குன்றின் உயர்ச்சிய - மலைபோன்ற தோற்றம் உடையனவும்; (ஆன) ஓடையானை - முகபடாம் அணிந்த யானையானது; கள்உற - தேனைப்போல்; கனிந்த - சிவந்த; பங்கி - தலைமயிரை உடைய அரக்கரைக் கடுத்த - அரக்கர்களை ஒத்திருந்தன.

அரக்கர்கள் வெண்மையான பற்களையுடையவர்கள் யானை வெண்மையான தந்தங்களைப் பெற்றிருக்கும். அரக்கர்களும் செந்தலையும் கரிய மெய்யும் உடையவர். யானையும் சிவந்த தலையும் கரிய மெய்யும் உடைய. அரக்கர் எப்போதும் ஊக்கம் உடையவர்கள் யானையும் ஊக்கம் பெற்றிருப்பன. அரக்கர்கள் மலை போன்ற எடுப்பான தோற்றத்தர். யானையும் மலைபோன்ற உயர்வை உடையன. ஆதலால் யானை அரக்கரைப் போன்றிருந்தன. பொருள் உவமையாயிற்று; உவமை பொருளாயிற்று. (தொல் உவம - 9). உள்- ஊக்கம். உப்பு இலி வெந்தை தின்று உள் அற்று வாழ்பவே (நாலடி)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They resembled the demons with hair red as ripe toddy! Followed lovingly
  2. by bees, moving swiftly, their bodies reeking of flesh,
  3. with white tusks, with red heads, with dark bodies,
  4. drunk with inner fire, tall as hills — the elephants with their face-plates!

What the poem says

Aṉumaṉ notices that the war elephants of Ilaṅkai look just like the demons, point by point. Both have white tusks or fangs, red heads (red paint for the elephants, red hair for the demons) and dark bodies. Both are full of fierce spirit and tall as hills, and both smell of flesh.

The commentary observes that the usual comparison is reversed here: the thing described becomes the standard of comparison.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḷḷuṟak kaṉinta paṅki arakkaraik kaṭutta! kātal
puḷ uṟat toṭarva, mēṉi pulāl uṟak kaṭitu pōva,
veḷ uṟuppu eyiṟṟa, ceyya talaiyaṉa, kariya meyya,
uḷ uṟak kaḷitta, kuṉṟiṉ uyarcciya, ōṭai yāṉai!