கம்பராமாயணம் 4924 · சுந்தர 3.42

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அனுமன் இலங்கை நோக்கி - இலங்கையைப் பார்த்து; (மதி முட்டுவன மாடம் - (உளறி விற்படை பெரிது என்கோ 43); என்றனன் - இவ்வாறு கூறினான்; இனையன - இப்படிப்பட்ட; பலவும் - பலவற்றையும்; எண்ணி - சிந்தித்து; நின்றனன் - நின்றான்; அரக்கர் - கொடிய அரக்கர்கள்; வந்து - முன்னே வந்து; நேரினும் நேர்வர் - எதிர்த்தாலும் எதிர்ப்பர்; என்னா - என்று சிந்தித்து; தன்தகை அனைய - தன்னுடைய தகுதிக்கும் பொருத்தமான; மேனி சுருக்கி - திருமேனியைச் சுருக்கிக் கொண்டு; அச்சரளச்சாரல் - அந்த தேவதாரு மரங்கள் நிறைந்த அடிவாரத்தைப் பெற்ற; குன்றிடை இருந்தான் - பவளமலையில் இருந்தான்; (அப்போது) வெய்யோன் - சூரியன்; குட கடல் குளிப்பதானான் - மேற்குக் கடலில் மறைவதானான்.

அனுமன் இவ்வாறு சிந்தித்தபின் அரக்கர்கள் போருக்கு வந்தாலும் வருவர் என்று கருதித் தன்னுடைய மேனியைச் சுருக்கிப் பவளமலையில் இருந்தான். “விசும்பிடைச் செல்லும் வீரன் - பவளமால் வரையில் பாய்ந்து,” “முட்டுவன மாடம்” “படை பெரிது என்கோ” (கம்ப. 4829, 4835, 4875) என்றனன் என்பது கம்பர் கண்ட மாட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So he spoke, gazing at Ilaṅkai, and thinking over many such things
  2. he stood; then, thinking, 'The demons may well come out and confront me,'
  3. he shrank his body to a size suited to his purpose, and on that hill with its slopes of pines
  4. he waited; and the Sun went down to bathe in the western sea.

What the poem says

This verse closes Aṉumaṉ's long reverie. "So he spoke" refers back across all the verses of wonder since the beginning of the canto.

Wary that the demons might notice him and come out to fight, he made his huge body small to suit his task and sat waiting on the coral hill among its pine-covered slopes. Meanwhile the Sun set into the western ocean. The next verses describe nightfall.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟaṉaṉ, ilaṅkai nōkki, iṉaiyaṉa palavum eṇṇi,
niṉṟaṉaṉ, arakkar vantu nēriṉum nērvar eṉṉāt
taṉ takai aṉaiya mēṉi curukki, ac caraḷac cāral
kuṉṟiṭai iruntāṉ; veyyōṉ kuṭakaṭal kuḷippa tāṉāṉ.