கம்பராமாயணம் 4925 · சுந்தர 3.43

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏய் வினை - தகுதியுடைய தவமுயற்சியால்; இறுதியில் - அழிவற்ற, செல்வம் எய்தினான் - செல்வத்தை அடைந்தவனும்; மனத்து - உள்ளத்தில், ஆய்வினை இலான் - ஆராய்வதைப்பெற்றிராதவனும்; அறிஞர் - அறிஞர்களின்; சொல் கொளான் - அறிவுரையை மதியாதவனும், வீவினை நினைக்கிலான் - தனக்கு வரும் மரணத்தை நினையாதவனும்; மெய்இலான் - சத்தியப் பற்றில்லாதவனும் (ஆகிய; ஒருவன் - ஒரு மனிதனுடைய; தீவினை என - தீச்செயல்கள் போல; எங்கும் - எல்லா இடத்திலும்; இருள் செறிந்தது - இருளானது அடர்ந்து பரவிற்று.

முயற்சியால் செல்வம் பெற்று முறை பிறழ்ந்தவனின் தீச்செயல் போல் இருள் செறிந்தது. ஏய்வினை - முயற்சி. வினைக்கண் வினையுடையான் (குறள் 519) இங்குள்ள வினைக்கு நல்வினை என்றும் தீவினை என்றும் கூறப் பெற்றமை நன்றெனில் கொள்க. தவ முயற்சியால் பொருள் பெற்றவன் இராவணன் ஆதலின் வேறு கூறற்க. இராவணன் குறிப்பாற் பேசப்படுகிறான்.

விளம் - விளம்- மா- கூவிளம் என்னும் சீர்களை இவ் விருத்தம் பெற்றுவரும். அமரர் கம்பன் அடிப்பொடி அவர்கள் இராமாவதாரத்தில் 2173 பாடல்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் (மணிமலர் 70)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One who by fitting effort won unending wealth,
  2. with no reflection in his mind, who takes no counsel from the wise,
  3. who never thinks of his own ruin, a man devoid of truth —
  4. like his evil deeds, the darkness thickened everywhere!

What the poem says

A new metre begins as night falls on Ilaṅkai. The darkness spreads like the wicked deeds of a certain kind of man. He has gained endless wealth through effort, but he never reflects, ignores wise advice, never thinks of his own death and has no regard for truth.

This is a veiled portrait of Irāvaṇaṉ, who won his riches through penance and then misused them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēyviṉai iṟutiyil celvam eytiṉāṉ
āyviṉai maṉattu ilāṉ aṟiñar coṟkoḷāṉ
vīviṉai niṉaikkilāṉ oruvaṉ mey ilāṉ
tīviṉai eṉa iruḷ ceṟintatu eṅkumē!