கம்பராமாயணம் 4929 · சுந்தர 3.47

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ்வழி அவ் இருள் பரந்த ஆயிடை
எவ்வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்
தெவ் வழி அந்தரத் திசையர் ஆகையால்
வெவ்வழி இருள்தர மதித்து மீச்செல்வார்.

பொருள் · Meaning in Tamil

அவ்வழி - அவ்விடத்தில்; அவ் இருள் - (விடம் போலவும் வெண்மை நீங்கிய புகழ் போலவும் உள்ள) அந்த இருளானது; பரந்த ஆயிடை - பரவிய அப்பொழுது; அரக்கர் - இராக்கதர்கள்; செவ் வழி - செம்மையான முறையின்; மந்திரத் திசையர் - மந்திர ஆற்றலால் நினைத்த திசையில் செல்லவல்லவர்; ஆகையால் - ஆதலால்; வெவ்வழி - கொடிய வழியை; இருள்தர - இருளானது காண்பிக்க; மிதித்து - (அதைப்படியாக் கொண்டு) மிதித்துக் கொண்டு; மீச் செல்வார் - மேல்நோக்கிப் போகின்றவராய், எவ்வழி மருங்கினும் - எந்த வழியிலும் எல்லாப் பக்கங்களிலும்; எய்தினார் - போயினார். இருள் பரவிய சமயத்தில் - அரக்கர் - மந்திரவன்மையால் இருளை மிதித்துச் சென்றனர். அரக்கரை நிசிசரர் என்பர் - அது இங்கு கற்பனை ஆற்றலால் பேசப்படுகிறது. மனிதர்களுக்குத் தடையான இருள் அரக்கர்களுக்குப் படியாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There, at that time when that darkness had spread,
  2. the demons went forth to every side, by every path;
  3. since by sure spells they could travel in whatever direction they wished,
  4. they climbed upward, treading the cruel path the darkness offered them.

What the poem says

Once the darkness has spread, the demons come out. They are creatures of the night, and through their magic they can travel in any direction they like.

The poet imagines them treading on the darkness as if it were a staircase and climbing up through the sky. Night, which stops human beings, is a pathway for them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avvaḻi av iruḷ paranta āyiṭai
evvaḻi maruṅkiṉum arakkar eytiṉār
cev vaḻi mantirat ticaiyar ākaiyāl
vevvaḻi iruḷtara mitittu mīccelvār.