கம்பராமாயணம் 4930 · சுந்தர 3.48

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அயில் - வேற்படையுடைய; வெந்தொழில் - கொடுந் தொழிலைச் செய்யும்; அரக்கனது ஏவல் - இராவணனுடைய கட்டளையை; மேயினார் - தலையில் சுமந்த இராக்கத வீரர்கள்; இந்திரன் - இந்திரனுடைய, வளநகர்க்கு ஏகுவார் - வளம் மிக்க நகருக்குச் செல்வார்கள்; எழில் - அழகுமிக்க; சந்திரன் உலகினைச் சார்குவார் - சந்திரனுடைய உலகை அடைவார்கள்; சலத்து - வஞ்சனையால்; அந்தகன் உறையுளை - எமன் தங்கியிருக்கும் உலகத்தை; அணுகுவார் - நெருங்குவார்கள்.

அரக்கன் ஏவலாளர் இந்திரன் முதலான தேவர்களின் தலைநகரை அடைவார்கள். இராவணனின் ஆணை பரவிய இடம் பேசப்பட்டது. செய்வினைக்குத் தக்க தண்டனை உண்டு என்பதை மெய்ப்பிக்கும் நகரம் அந்தகன் உறையுள். ஆதலின் அங்கு அரக்கர்கள் விரும்பிச் செல்லார். ஆதலின் சலத்து அந்தகன் உறையுளை அணுகுவர் என்று கூறப்பெற்றது. 'சலித்து' என்று பாடம் கொண்டு வெறுத்துச் செல்வர் எனச் சொல்லலும் ஒன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some go to the rich city of Intiraṉ, some
  2. reach the world of the lovely Moon, some by guile
  3. approach the dwelling of Death — those who bear the commands
  4. of the demon of the spear and cruel deeds.

What the poem says

At night Irāvaṇaṉ's agents spread out across the worlds on his orders. They go to Intiraṉ's capital and to the realm of the Moon, which shows how far the demon king's rule extends.

They also slip, by trickery, into the kingdom of Death, where every deed meets its due punishment. The commentary notes that demons would not go there willingly, and mentions a variant reading meaning "reluctantly".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intiraṉ vaḷanakarkku ēkuvār eḻil
cantiraṉ ulakiṉaic cārkuvār calattu
antakaṉ uṟaiyuḷai aṇukuvār ayil
ventoḻil arakkaṉatu ēval mēyiṉār.