கம்பராமாயணம் 4931 · சுந்தர 3.49

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன் நகர்மடந்தையர் - தேவலோக மகளிர்களும்; விஞ்சைப் பூவையர் - வித்தியாதரப் பெண்களும்; பன்னக வனிதையர் - நாக கன்னியர்களும்; இயக்கர் பாவையர் - யட்ச மங்கையர்களும்; முன்னின பணி - (தாங்கள்) ஏற்றுக்கொண்டு செய்து முடித்த வேலையானது; முறைமாறி - கிரமப்படி மாறுகின்ற காரணத்தால்; முந்துவார் - விரைபவராய், விசும்பின் - ஆகாயத்திலே; மின்இனம் மிடைந்தென - மின்னல் கூட்டம் நெருங்குவது போல்; மீச்செல்வார் - மேலே போவார்கள்.

பணி செய்துமுற்றிய மகளிர்கள் தம் பணியைப் பிறர்பால் ஒப்படைத்துவிட்டு விண்ணில் செல்வது மின்னற்கூட்டம் நெருங்குவது போல் உள்ளது. முந்துவார் - முந்தி, முற்றெச்சமாகக் கொள்ளப்பட்டது. முறை மாறுதல் - தம்பணியைப் பிறர்பால் ஒப்படைத்தல். சிலம்பில் மாதரி, “நெய் முறை நமக்கு இன்று” என்று கூறியதைக் கருதுக. இவர்கள் பகற்பணியாளர்கள். பகற்பணிக்கு மகளிரும் இரவுப் பணிக்கு ஆடவரும் அமைந்தனர் போலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The women of the golden city, the Vidyādhara maidens,
  2. the serpent women, the daughters of the Yakṣas,
  3. their tasks finished and their turn of service changed, hurry
  4. up through the sky like swarms of lightning crowding together.

What the poem says

When night falls the shifts change in Ilaṅkai. The celestial women of heaven, of the Vidyādharas, of the Nāgas and of the Yakṣas have served the demons all day.

Having handed their work over to others, they rush back up into the sky, flashing like crowds of lightning. The commentary suggests that women served by day and men by night.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ nakar maṭantaiyar viñcaip pūvaiyar
paṉṉaka vaṉitaiyar iyakkar pāvaiyar
muṉṉiṉa paṇimuṟai māṟi muntuvār
miṉṉiṉam miṭainteṉa vicumpiṉ mīccelvār.