கம்பராமாயணம் 4932 · சுந்தர 3.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவரும் அவுணரும்- தேவர்களும் அசுரர்களும்; செங்கண் நாகரும்- சிவந்த கண்களையுடைய நாகலோகத்தவர்களும்; மேவுஅரும் இயக்கரும் - எல்லோரும் விரும்பும் யட்சர்களும்; விஞ்சை வேந்தரும் - வித்தியாதரத்தலைவர்களும்; யாவரும் - (கூறப்பெறாது) மற்றவர்களும்; தா அரும் பணி - தீமை அற்ற வேலைகளை; முறை தழுவும் - கிரமப்படி மேற்கொள்ளும்; தன்மையார் - இயல்பை உடையவராய்; விசும்பு - ஆகாயத்தின்கண்; இருள்இரிய - இருளானது சிதறி ஓடும்படி; ஈண்டினார் - ஒன்று கூடினார்கள்.
தேவர்கள் முதலானவர்கள், தங்கள் தங்கள் பணியைச் செய்ய இருள் சிதறியோடும்படி விண்ணில் ஒன்று கூடினர். அவுணர் - அசுரர் - இவர்கள் இரவில் பணிபுரிபவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Gods, asuras, red-eyed Nāgas,
- the Yakṣas whom all desire, the Vidyādhara kings,
- and all others gathered, so that the darkness of the sky fled,
- bound as they were to take up in turn their unfailing tasks.
What the poem says
The night shift arrives. Gods, asuras, Nāgas, Yakṣas, Vidyādhara lords and others gather in the sky to begin their duties for Irāvaṇaṉ.
They are so many, and so radiant, that the darkness of the sky is scattered by their arrival.