கம்பராமாயணம் 4967 · சுந்தர 3.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயன் - ஒப்பற்ற அனுமன்; நக்காளைக் கண்டு - சிரித்த இலங்கைத் தேவியைப் பார்த்து; மனத்து - உள்ளத்துக்குள்ளே; ஓர் நகை கொண்டான் - சிரித்துக் கொண்டான்; (அப்போது இலங்கைத் தேவி ஐயனை நோக்கி) நக்காய் - (அடே நீ) என்னைப் பார்த்துச் சிரிக்கவா செய்தாய், நீ யார் - நீ யாவன்; யார் சொல வந்தாய் - எவர் கட்டளையிட வந்திருக்கிறாய்; உனது ஆவி - உன்னுடைய உயிர் (என்னால்); உக்கால் ஏது ஆம் - அழிந்தால் (உனக்கு) பயன் யாது?; ஓடலை - அடே ! ஓடிப் போக மாட்டாய்; என்றாள் - என்று கூறினாள்; (அப்போது) புகழ் கொண்டான் - புகழ் பெற்ற அனுமன்; இனி - இப்போது; இ ஊர் புக்கால் அன்றி - இந்த நகருக்குள் நுழையாமல், போகலென் - (திரும்பிச் செல்ல மாட்டேன்; என்றான் - என்று கூறினான்.
இனி - இப்போது; இனி நினைந்து இரக்கம் ஆகின்று (புறம்) இனிமேல் என்று அதற்குப் பொருள் கூறுவது நன்றேல் கொள்க. புக்கு - ஆல் - புகுந்தால் நுழைந்தால்) ஆல் - எதிர்கால வினை எச்ச விகுதி. உருபு அன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing her laugh, the lord laughed in his heart;
- 'You laugh? Who are you? At whose bidding have you come? If your life
- is spilled, what then? Won't you run?' she said. 'Now, unless I enter
- this city, I will not leave!' said he who had won renown.
What the poem says
Her laughter makes Aṉumaṉ smile inwardly. Angered by that, the goddess demands to know who he is and who sent him. What will he gain if she takes his life? Why does he not run?
The renowned Aṉumaṉ answers firmly that he will not turn back until he has entered the city.