கம்பராமாயணம் 4966 · சுந்தர 3.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்னா முன்னம் - என்று அனுமன் கூறுவதற்கு முன்னே; (இலங்கைத்தேவி அனுமனை நோக்கி) ஏகு என - நான், “போ” என்று கட்டளையிடவும், ஏகாது - போகாமல்; எதிர் மாற்றம் சொன்னாயே - எதிர் மொழி பேசுகிறாயே; அடா - அற்பனே; நீ யாவன் - நீ யார்?; தொல் - பழமையான; புரம் அட்டான் அன்னாரேனும் - முப்புரம் எரித்த சிவபிரான் போன்றவர்களும்; எய்தற்கு - என்முன் வருவதற்கு; அஞ்சுவர் - பயப்படுவார்கள் (அப்படியிருக்க); அளி உற்றால் - ஊரைக் காண வேண்டும் என்னும் ஆசை உனக்கு வந்தால்; இவ் ஊர் - இந்த இலங்கை; உன்னால் எய்தும் ஊர்கொல் - உன்னால் அடையத்தக்க எளிய ஊரா? என்று - என்று கூறி; உற நக்காள் - மிகுதியாகச் சிரித்தாள்.
எய்துதற்கு -(இந்த நகரை அடைய என்னும் பொருள் கூறப்பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before he had finished: 'When I said "Go!" you did not go, but
- you answer back? Who are you, fellow? Even those like him who destroyed the ancient cities
- would fear to come here; and because a longing has come upon you,
- is this a city for you to enter?' — and she laughed aloud.
What the poem says
The goddess cuts him off. He was told to go and did not, and now he dares to argue. Even beings like Śiva, who burned the three ancient cities, would hesitate to approach her.
Does a mere monkey think he can stroll into Ilaṅkai just because he feels like seeing it? She bursts out laughing.