கம்பராமாயணம் 4969 · சுந்தர 3.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இலங்கைத் தேவி)
கொல்வாம் - நாம் இவனைக் கொல்வோம்; அன்றேல் - கொல்லப்படாமல் விட்டு விட்டால்; இ ஊர் - இந்த இலங்கை; கோள் உறும் - (இவனால்) அழிக்கப்படும்; எனல் கொண்டாள் - என்று மனத்திலே எண்ணி; வெல்வாயேல் - என்னை வெற்றி கொள்ள முடிந்தால்; நீ வேறி - நீ வெல்லுக; என - என்று கூறி; விழிதோறும் - கண்கள் தோறும்; வல்வாய்தோறும் - கொடிய வாய்கள் தோறும்; வெங்கனல் பொங்க - கொடிய நெருப்பு மூண்டு எரிய; மூ இலை வேலை - மூன்று தலைகளையுடைய சூலத்தை; மதி வானில் - சந்திரன் ஒளி வீசும் வானிலே; செல்வாய் என்னா - செல்லுவாயாக என்று கூறி; செலவிட்டாள் - அனுமன்மேல் வீசி எறிந்தாள்.
சூலம் முத்தலைபெற்று, வேல்போல இருத்தலின் வேல் என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'We must kill him! Otherwise this city will come to ruin!' she resolved;
- 'If you can win, then win!' she said, and from each of her eyes
- and each cruel mouth fierce fire blazed up; 'Into the moonlit sky
- go!' she cried, and sent her three-bladed spear flying.
What the poem says
The goddess realises that unless she kills this intruder, Ilaṅkai will be destroyed. "Beat me if you can!" she cries.
With fire pouring from her eyes and mouths, she hurls her trident, the three-pointed spear, at him, telling him he will be sent flying into the moonlit sky.