கம்பராமாயணம் 4982 · சுந்தர 3.100

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று அன இயம்பி, வீதி ஏகுவது இழுக்கம் என்னாத்
தன் தகை அனைய மேனி சுருக்கி, மாளிகையில் சாரச்
சென்றனன் என்ப மன்னோ, தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என, அயோத்தி வேந்தன் புகழ் எனக், குலவு தோளான்!

பொருள் · Meaning in Tamil

தேவருக்கு - தேவர்களுக்கு; அமுதம் ஈந்த - அமுதத்தை வழங்கிய; குன்று என - (மந்தர மலையைப் போலவும், அயோத்தி வேந்தன் - அயோத்தி அரசனான இராமபிரானின்; புகழ் என- புகழைப் போலவும்; குலவு தோளான் - திரண்ட தோள்களைப் பெற்ற அனுமன்; என்றனன் இயம்பி - என்று (இலங்கையின் அழகைத் தனக்குள் கூறிக் கொண்டு; வீதி ஏகுதல் - வீதி வழியே போவது; இழுக்கம் என்னா - தவறு நேர்வதற்குக் காரணம் என்று நினைத்து; தன் தகையனையமேனி - தன்னுடைய சிறப்புக்கேற்ற திருமேனியை; சுருக்கி - சுருக்கிக் கொண்டு; மாளிகையில் சார- மாளிகை சார; சென்றனன் - போயினான்.

'மாளிகையின் சாரல்' என்று பாடம் கொண்டு மாளிகையாகிய மலைச் சாரலில் எனப் பொருள் உரைப்பர் சாரல் என்றதனால் மாளிகை மலையாயிற்று. மாளிகையை ஓட்டிய பகுதியைச் சாரல் என்பர். என்ப - உரையசை மன், ஓ, இடைச்சொற்கள், அசை நிலையாய்வந்தன. தெருவில் சென்றால் அரக்கரால் வரும் இடையூற்றை 'இழுக்கம்' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So he spoke; then, judging it a mistake to go along the streets,
  2. he shrank his body to a size befitting his purpose, and keeping close to the mansions
  3. he went on, they say — he whose arms were broad as the mountain that gave the gods
  4. their nectar, broad as the fame of the king of Ayōttī!

What the poem says

Aṉumaṉ decides that walking openly in the streets would invite trouble from the demons. He makes his body small and moves along close to the walls of the mansions.

His shoulders are as broad as Mount Mantara, which the gods used to churn the ocean for nectar, and as wide as the fame of Irāmaṉ, king of Ayōttī.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟaṉaṉ iyampi, vīti ēkutal iḻukkam eṉṉāt
taṉ takai aṉaiya mēṉi curukki, māḷikaiyil cārac
ceṉṟaṉaṉ eṉpa maṉṉō, tēvarukku amutam īnta
kuṉṟu eṉa, ayōtti vēntaṉ pukaḻ eṉak, kulavu tōḷāṉ!