கம்பராமாயணம் 4981 · சுந்தர 3.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொசிவு உறு - ஒளிக் கசிவைப் பெற்றிருக்கின்ற; பசும்பொன் குன்றில் - பசிய பொன்மயமான திரிகூட மலையின்கண்; பொன் மதில் நடுவண் - பொன்னாற் செய்த மதிலுக்கு நடுவில்; பூத்து - மலர்ந்து; வசை அற - குற்றம் எல்லாம் இல்லாது போக; விளங்கும் - பிரகாசிக்கின்ற; சோதி மணியினால் - ஒளிக்கப்பெற்ற மாணிக்கங்களால்; அமைந்த மாடத்து - அமைந்த மாடங்களால்; அசைவு இல் - நடுங்குதல் இல்லாத; இவ் இலங்கை மூதூர் - இலங்கை நகரில்; ஆர் இருள் இன்மையாலோ - மிக்க இருள் இல்லாத காரணத்தாலோ; நெடுநகர் - பெரு நகரில் (வாழ்கின்ற); நிருதர் எல்லாம் - எல்லா அரக்கர்களும்; நிசிசரர் ஆயிற்று - இரவில் சஞ்சரிப்பவர்கள் ஆயினது. இது தற்குறிப்பேற்றம். பிற - பிறவே. பொசிவுறுதல் - கசிதல். நீர்ப்பொசிவு, கண்டுள்ளோம். இங்கு ஒளிப்பொசிவு பேசப்படுகிறது இதுவே கவிச் சக்கரவர்த்தியின் திருவுள்ளம் பொரிவு - நெகிழ்வு என்பர். ஈண்டு நெகிழ்ச்சி வேண்டின் கொள்க.
98-99 ஆம்பாடல்கள் அனுமனின் கற்பனை ஓட்டம். 98 ஆம் பாடல் சூரியனை மின்மினியாக்கிற்று. 99ஆம் பாடல் அரக்கரை நிசிசரர் ஆக்கிற்று. இது கவிதைச் சித்து.
நிருதர் நிசிசரர் ஆயினது இருள் இன்மையாலே என்க. ஆயிற்று என்பது ஆயது என்றும் பொருள்தரும் தொழிற்பெயர் ஆம் - முற்று அன்று. இன்மையாலோ - இதில் உள்ள ஓகாரம் அசையாகவும் கொள்ளலாம் அசையாகக் கொண்டால் இருள் இன்மையால் நிருதர் நிசிசரர் ஆயினர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'On the green-gold hill oozing with light, within golden walls, blossoming
- and shining without flaw, with mansions built of radiant gems —
- is it because in this unshaken ancient city of Ilaṅkai there is no deep darkness
- that all the Nirutar of the great city became night-walkers, ah!'
What the poem says
Ilaṅkai stands on golden Mount Trikūṭa, inside golden walls, and its jewelled mansions seem to seep light, so the city never knows real darkness.
Aṉumaṉ jokes that this must be why the demons (the Nirutar) are called "night-walkers": since there is no true night in Ilaṅkai, they can walk about freely at night. The commentary calls this "fanciful ascription", a figure in which the poet supplies an imaginative cause for a fact.