கம்பராமாயணம் 4984 · சுந்தர 3.102

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பெரிய நாள் ஒளிகொள் நானாவித மணிப் பித்திப் பத்தி
சொரியும் மா நிழல் அங்கு அங்கே சுற்றலால், காலின் தோன்றல்,
கரியனாய் வெளியன் ஆகிச் செய்யனாய்க் காட்டும், காண்டற்கு
அரியனாய் எளியனாம் தன் அகத்து உறை அழகனே போல்!

பொருள் · Meaning in Tamil

நாள் ஒளி கொள்- நட்சத்திரங்களின் ஒளியைப் பெற்ற; நானாவித - பலவிதமான; பெரியமணி - பெரியமணிகள் (பதிக்கப்பெற்ற); பித்திப் பத்தி - சுவரின் வரிசைகள்; சொரியும் - பொழிகின்ற; மா நிழல் - சிறந்த ஒளியானது அங்கங்கே, அனுமன் செல்லுகின்ற இடமெல்லாம் சுற்றலால் - அனுமனைச் சூழ்ந்துள்ள காரணத்தால்; காலின் தோன்றல் - வாயுதேவனின் புதல்வனான அனுமன்; காண்டற்கு அரியனாய் - கண்ணாற் காண்பதற்கு அரியவனாய்; எளியனாய் - அறிவால் காண்பதற்கு எளியவனாய்; தன் அகத்து - தன்னுடைய மனத்திலே; உறை அழகனே போல் - தங்கியிருக்கும் இராமபிரானைப் போல; கரியனாய் - கரிய நிற முடையவனாகவும் (திருமால்); வெளியனாய் - வெண்ணிறமுடையவனாகவும் (பிரம்மதேவன்); செய்யனாய் - செந்நிறமுடையவனாகவும் (சிவபிரான்; காட்டும் - (தன்னைப் பலவிதமாகக் காண்பித்துக் கொண்டான்.

பலவிதமாக ஒளியைப் பாய்ச்சும் சுவர்களின் சார்பால் அனுமன் தன் உள்ளத்தில் உள்ள இராமபிரானைப் போலக் கரியவனாகவும் வெளியவனாகவும் சிவந்தவனாகவும் தன்னைத் தோற்றுவித்துக் கொண்டான், அனுமன் நீலம், முத்து, மாணிக்க மணிகளின் ஒளியால் சுற்றப்படும் போது முறையே கரியன், வெளியன், செய்யன் ஆகிறான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great radiance, starlike, poured from the rows of walls set with many kinds of gems
  2. and fell around him here and there, the son of the Wind
  3. showed himself now dark, now white, now red — hard
  4. to see, yet easy to reach, like the Beautiful One who dwells within his heart!

What the poem says

As Aṉumaṉ passes the jewelled walls, their light falls on him in different colours. Sapphires make him look dark, pearls make him look white, and rubies make him look red.

In this he resembles the Lord who lives in his heart. Irāmaṉ, as the supreme god, appears dark as Viṣṇu, white as Brahmā and red as Śiva, and is hard to see with the eye yet easy to reach through devotion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1periya nāḷ oḷikoḷ nāṉāvita maṇip pittip patti
coriyum mā niḻal aṅkaṅkē cuṟṟalāl, kāliṉ tōṉṟal,
kariyaṉ āy veḷiyaṉ ākic ceyyaṉāyk kāṭṭum, kāṇṭaṟku
ariyaṉ āy eḷiyaṉ āy taṉ akattu uṟai aḻakaṉē pōl!