கம்பராமாயணம் 4985 · சுந்தர 3.103

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈட்டுவார் தவம் அலால், மற்று ஈட்டினால் இயைவது இன்மை
காட்டுவார் விதியார், அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நையப் பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர், ஆடுவார் அரக்கர் மாதர்!

பொருள் · Meaning in Tamil

பூட்டு - கச்சால் இறுக்கக் கட்டப்பெற்ற; முலை பொறாத - கொங்கைகளைச் சுமக்கவியலாத; பொய் இடை - நுட்பமான இடையானது; நைய - வருத்தம் அடையும்படி; அமரர் மாதர் - தேவ மகளிர்; பூ நீர் - சங்கமுகநதியில்; ஆட்டுவார் - நீராட்டுவார்கள்; அரக்க மாதர் - அரக்க மகளிர்; ஆடுவார் - நீராடுவார்கள்; அஃது - அக்காட்சியால்; விதியார் - நல்வினை என்பவர்; ஈட்டுவார் - தேடிச் சேர்க்க விரும்புவர்; தவம் அ(ல்)லால்- தவம் ஒன்றைத் தவிர; மற்று - (பொருள் முதலான) பிறவற்றை; ஈட்டினால் - சேர்த்து வைத்தால்; இயைவது இன்மை - ஏற்றதாக (அறம்) அமையாததை; காட்டினார் - கண்கூடாக்கினார் (இதை); காண்கிற்பார் - காணும் ஆற்றலுடையவர்கள்; காண்மின் - காணுங்கள் (அம்மா - உரையசை.

இடை வருந்தத் தேவமகளிர் நீராட்ட அரக்கியர்கள் நீராடுகின்றனர் அக்காட்சியால் தேடிச் சேர்க்க விரும்புபவர் தவத்தைத் தவிரப் பிறவற்றைச் சேர்த்தால் அவை இயையாமையை விதியார் அறிவித்தார். காணும் ஆற்றலுடையவர்கள் காணுங்கள்.

100 முதல் 103 வரை கவிக் கூற்று. இழிந்த அரக்கியர்க்கு உயர்ந்த தேவ மாதர் பணி செய்தனர். இது தவத்தின் பயன். “அறத்தாறு” என்னும் குறளில் 'இது' என்பது ஈண்டு அது என வந்தது.

இஃது என்னும் பாடபேதம் சிறந்தது. பூ நீர் - சங்கமுக நதி; பூ - சங்க முகம். நீர்- நதி. பூம்புகார் என்பதன் தொடரை ஆய்க. பூ நீர்- பன்னீர் என்று பொருள் கூறப் பெற்றது. அம்மா வியப்பிடைச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who would gather should gather penance; that gathering aught else brings nothing fitting
  2. Fate has shown plainly; let those who can see behold it, ah!
  3. Their slender waists aching beneath breasts bound tight in bodices, with fragrant water
  4. the women of the gods bathe them, and the demon women are bathed!

What the poem says

Here the poet speaks in his own voice. Goddesses, their delicate waists aching, bathe demon women in fragrant water, and the high now serve the low.

For the poet this sight is a lesson written by fate for anyone with eyes to see. Only penance, here Irāvaṇaṉ's austerities, truly bears fruit, and nothing else one accumulates compares with it. The next verses begin a long list of scenes Aṉumaṉ sees in the palaces.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṭṭuvār tavam alāl, maṟṟu īṭṭiṉāl iyaivatu iṉmai
kāṭṭiṉār vitiyār, aḵtu kāṇkiṟpār kāṇmiṉ ammā!
pūṭṭu vār mulai poṟāta poy iṭai naiyap pū nīr
āṭṭuvār amarar mātar, āṭuvār arakka mātar!