கம்பராமாயணம் 507 · பால 9.41
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு
கண்டு, துண் எனும் மனத்தினன், கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன், புகழக்,
'கொண்டு போதி நின் இவுளி' என்று உற்றதும் குறித்தான்.
பொருள் · Meaning in Tamil
அம்சுமான் இறந்துவிட்ட தன் தந்தையரின் சாம்பல் மலைபோலக் குவிந்து கிடப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். கபில முனிவனை வணங்கிக் குதிரையைக் கொண்டுபோகக்கேட்டான். கபிலனும் உடன் பட்டான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing the white ash heaped like a hill from the bodies of those who had perished,
- shaken at heart, he bowed at the soft lotus feet
- of the great sage Kapilaṉ and rose; and as he praised him,
- the sage said, 'Take your horse and go,' and told him what had happened.
What the poem says
In the underworld Añcumāṉ finds the ashes of his sixty thousand uncles heaped up like a hill. Shaken, he does not repeat their arrogance. He bows to Kapilaṉ and humbly asks for the horse, and the sage lets him take it.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇṭu nīṅkiṉar uṭal uku piṟaṅkal veṇ nīṟu
kaṇṭu, tuṇṇeṉum maṉattiṉaṉ, kapila mā muṉitaṉ
puṇṭarīka meṉ tāḷ toḻutu eḻuntaṉaṉ, pukaḻak,
'koṇṭu pōka niṉ ivuḷi' eṉṟu uṟṟatum kuṟittāṉ.