கம்பராமாயணம் 5078 · சுந்தர 3.196

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாயினன் : 'காரணம் கடை நின்றது
உண்டு வேறு ஒரு சிறப்பு! எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளைக்
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்? குல மணி மனைக்கு எல்லாம்,
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது! 'என வியப்பு உற்றான்.

பொருள் · Meaning in Tamil

(அனுமன்) கண்டு - (மாடத்தைப்) பார்த்து; கண்ணொடும் - கண்களையும்; கருத்தொடும் - அறிவையும்; கடாவினான் - புகுத்தினான் (பிறகு); காரணம் - யான் தேடிவந்த காரணம்; கடை நின்றது - இறுதிப் பகுதியில் உள்ளது; வேறு ஒரு சிறப்பு - மற்ற மாளிகையினும் வேறுபட்ட தனிச்சிறப்பு; உண்டு - (இம்மாளிகைக்கு) இருக்கிறது; எங்கள் நாயகற்கு - எங்கள் தலைவனாகிய இராமபிரானுக்கு; உயிரினும் இனியாளை - உயிரைவிட இனிமை மிக்க பிராட்டியை; கொண்டு போந்தவன் - கொண்டு வந்த இராவணன்; வைத்தது - வைத்துள்ள; ஓர் உறையுள் கொல் - ஒரு மாளிகையோ (இம்மாடம்); இது - இந்த மாளிகை; குலமணி - சிறந்த மணிகள் பதிக்கப்பெற்ற; மனைக்கெல்லாம் - மாளிகை யாவற்றுக்கும்; விண்டுவின் - திருமாலின்; தடமார்பினில் - பெரிய மார்பில் (உள்ள); மணி ஒத்தது - கௌத்துவ மணியை ஒத்துள்ளது; என - என்று நினைந்து; வியப்புற்றான் - அதிசயப்பட்டான்.

ஓடு என்னும் மூன்றன் உருபை “உம்” என்று மாற்றுக. ‘தவத்தொடு தானம் செய்வாரில் தலை’ இங்கு தவமும் தானமும் எனப் பொருள் கூறப்பெற்றது. “ஒடு” என்பதை ஆலாக்குவதும் உண்டு. “ஒடு” உருபாக்கி கண்ணாலும், கருத்தாலும் ஆராய்ந்து என்றும் பொருள் கூறலாம். ‘கண்ணொடு கடவுளைக் கண்டாயே’ என்னும் மருதக் கலிக்கு (28) கண்ணால் கடவுளரைக் கண்டாயோ என்று இனியர் உரை வகுத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing it, he searched it with his eyes and with his mind: 'The cause of my quest stands at its end;
  2. this place has some distinction beyond the rest! Is this a dwelling where he who carried off
  3. the one dearer than life to our Lord has kept her? Among all these mansions of choice gems
  4. this is like the jewel on Viṭṭuṇu's broad chest!' So he marvelled.

What the poem says

Aṉumaṉ stares at Maṇṭōtari's mansion with his eyes and his mind. It stands out from all the rest, the way the Kaustubha gem shines on the broad chest of Viṣṇu among all other jewels.

He wonders whether his search is over: perhaps this is where Irāvaṇaṉ has kept Cītai, who is dearer than life to Irāmaṉ. The setting is building up to his mistake in the next verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭu, kaṇṇoṭum karuttoṭum kaṭāviṉaṉ: 'kāraṇam kaṭai niṉṟatu
uṇṭu vēṟu oru ciṟappu! eṅkaḷ nāyakaṟku uyiriṉum iṉiyāḷaik
koṇṭu pōntavaṉ vaittatu ōr uṟaiyuḷkol? kula maṇi maṉaikku ellām,
viṇṭuviṉ taṭa mārpiṉiṉ maṇi ottatu itu! 'eṉa viyappuṟṟāṉ.