கம்பராமாயணம் 5077 · சுந்தர 3.195

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு இரண்டு அமை கோடி
தூய மாளிகை நெடும் தெரித் துருவிப்போய்த் தொலைவு இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான், கண்டனன், நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் மணி மாடம்.

பொருள் · Meaning in Tamil

ஆய - அப்படிப்பட்ட; விஞ்சையர் மடந்தையர் - வித்தியாதரப் பெண்கள்; அமை ஆறு இரண்டு கோடி - தங்கியிருக்கும் பன்னிரண்டு கோடி எண்ணுள்ள; தூய - தூய்மையான; மாளிகை - மாளிகைகளைப் பெற்ற; நெடுந் தெரு - நீண்ட தெருக்களை; துருவிப் போய் - தேடிச் சென்று; தொலைவு இல் - அழிதல் இல்லாத; மூன்று உலகிற்கும் நாயகன் - மூன்று உலகிற்கும் தலைவனான இராவணனின்; பெருங்கோயிலை - பெரிய அரண்மனையை; நண்ணுவான் - அடையும் அனுமன் (இடையில்); நளிர்திங்கள் - குளிர்ந்த சந்திரனும்; மாய - ஒளி மழுங்க; நந்திய - விளங்கிய; வாள் முகத்து - ஒளியையுடைய முகத்தைப் பெற்ற; ஒரு தனி - ஒப்பற்ற; மயன்மகள் - மயனின் புதல்வியாகிய மண்டோதரி; உறைமாடம் - தங்கியிருக்கும் மாளிகையை; கண்டனன் - பார்த்தான்.

மயன் - அசுரர்களின் சிற்பி. மயன்மகளை இராவணன் திருமணம் செய்த வரலாறு உத்தரகாண்டம் இராவணன் பிறப்புப்படலம் பேசும். திங்கள் மாய் - திங்களின் ஒளி குறைய. மாய்தல் - ஒளி குறைதல். பகல் மாய என்னும் நெய்தற் கலித் (26-39) தொடர்க்கு இனியர் பகற்காலத்தின் “ஒளி மழுங்க” என்று உரை வகுத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Searching through the long streets of pure mansions, twelve crores of them,
  2. where those Vidyādhara women dwelt, he went on to reach the great palace
  3. of the lord of the three undying worlds, and on the way he saw
  4. the mansion where Mayaṉ's peerless daughter lived, whose shining face dims the cool moon.

What the poem says

Having searched the hundred and twenty million mansions of the Vidyādhara women, Aṉumaṉ heads for Irāvaṇaṉ's great palace. On the way he sees the mansion of Maṇṭōtari, Irāvaṇaṉ's chief queen.

She is the daughter of Mayaṉ, the architect of the asuras, and her shining face outshines the moon. This begins one of the epic's famous scenes, in which Aṉumaṉ at first mistakes her for Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āya viñcaiyar maṭantaiyar uṟaiviṭam āṟu iraṇṭu amai kōṭi
tūya māḷikai neṭun terut turuvippōyt tolaivu il mūṉṟu ulakiṟkum
nāyakaṉ peruṅ kōyilai naṇṇuvāṉ, kaṇṭaṉaṉ, naḷir tiṅkaḷ
māya nantiya vāḷ mukattoru taṉi mayaṉ makaḷ uṟai māṭam.