கம்பராமாயணம் 5076 · சுந்தர 3.194

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம்வகை, திரிந்து சிந்தனை சிந்த,
முறுகு காதலின் வேதனை உழப்பவர், முயங்கிய முலைமுன்றில்
இறுகு சாந்தமும், எழுதிய குறிகளும், இன் உயிர்ப் பொறை ஈர,
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர், மயங்கினர், உயிர்க்கின்றார்.

பொருள் · Meaning in Tamil

சிறுகு காலங்கள் - மிகச்சிறிய நாழிகை முதலான காலங்கள்; ஊழிகள் ஆம்வகை - பலயுகங்கள் ஆகும்படியாக; சிந்தனை - மனமானது; திரிந்து சிந்த - வேறுபட்டுச் சிதறிப் போக; முறுகு காதலின் - முற்றிய காமத்தாலே; வேதனை உழப்பவர் - துன்பத்தால் வருந்தி; முயங்கிய - இராவணன் தழுவிய; முலைமுன்றில் - முலைத் தடத்திலே (அவன் பூசிய); இறுகு சாந்தமும் - உலர்ந்த சந்தனமும் (அவனால்); எழுதிய - எழுதப்பெற்ற; குறிகளும் - கரும்பு முதலிய சித்திரங்களும்; இன் - இனிமையான; உயிர்ப்பொறை - உயிராகிய பாரத்தை; ஈர - அறுக்க; மறுகு - கலங்குகின்ற; வாட்கண்கள் - வாள் போன்ற கண்களானது; சிவப்புற - செந்நிறம் அடைய; நோக்கினர் வயிர்த்தனர் - (இராவணன் வருகையை) பார்த்து சினம் கொண்டு; உயிர்க்கின்றார் - பெருமூச்சு விடுகின்றனர். சிறு காலங்கள் நொடி, இமை, முதலியவை. முலைமுன்றில் - மார்பு. இளங்கோ அடிகள் “கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்” என்பர். முலை முதல் முற்றம் என்னும் சிந்தாமணித் தொடருக்கு (25-39) முலை தோன்றுவதற்குக் காரணமாகிய மார்பு என்று இனியர் விளக்கம் வரைந்தார். நோக்கியதால் கண்கள் சிவந்தன. உயிர்ப்பொறை - உயிராகிய பாரம். பண்புத் தொகை. அதற்கு உடல் என்றும் கூறலாம். முலை முன்றில் இறுகும் சாந்தம் இராவணனுடனே கூடின காலம் அவன் மார்பில் சந்தனங்கள் முலை மத்தியிலே கிடக்கக் கண்டு என்பது பழைய உரை. (அடை - பதி) வயிர்த்தது - காலம் தாழ்த்தியமை பற்றி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As tiny moments turned into ages, their thoughts wandering and scattering,
  2. suffering the torment of a love grown fierce, as the hardened sandal paste on the breasts he embraced
  3. and the designs drawn there cut through the sweet burden of their life,
  4. they looked with darting sword-like eyes turned red, and in anger heaved sighs.

What the poem says

For these waiting women every moment drags on like an age. On their breasts are dried sandal paste left from Irāvaṇaṉ's embrace and the decorative designs he once painted there.

Seeing these reminders cuts into them like a blade. They look again for his coming, their eyes red with anger that he is so late, and they sigh heavily. Painting patterns on a beloved's breasts is an old Tamil custom between lovers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciṟuku kālaṅkaḷ ūḻikaḷ āmvakai, tirintu cintaṉai cinta,
muṟuku kātaliṉ vētaṉai uḻappavar, muyaṅkiya mulaimuṉṟil
iṟuku cāntamum, eḻutiya kuṟikaḷum, iṉ uyirp poṟai īra,
maṟuku vāṭ kaṇkaḷ civappuṟa nōkki, vayirttaṉar, uyirkkiṉṟār.